சிம்மம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

சிம்மம்:

அதிசார நிலையில் மாதம் முழுவதும் ராசிக்கு குருபார்வை இருக்கும் நிலையில் தனாதிபதி புதனும் வலுவுடன் இருக்கும் மாதம் இது. மாதத்தின் முற்பகுதி நாட்கள் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குருவின் பார்வையில் இருப்பதால் சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் தேவைகள் நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்களில் பூரம்நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல திருப்பமான நிகழ்வுகள் நடக்கும்.


இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். உதாரணமாக கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் நல்லபடியாக குணம் அடைவீர்கள். உடல்நலம் சீராகும். கோரனாவினால் பண நிலைமைகள்  பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாதம் மீண்டு வருவீர்கள். 

திறமை இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் அல்லாடியவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்பும் வெற்றியும் இனிமேல் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல்  போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். இன்னொரு நிலையாக யோகாதிபதி செவ்வாய் நீச்ச நிலைக்கு மாறுவதால் குழந்தைகள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்கள் மேல் அக்கறையுடன் இருங்கள். பருவ வயது குழந்தைகள் விஷயத்தில் சண்டைகள் வரலாம். தலைமுறை இடைவெளியை சிலர் உணருவீர்கள். உங்களின் குழந்தைகளை நீங்களே வேறு கோணத்தில் பார்க்கும் மாதம் இது. ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. முகநூலில் சிலருக்கு இனிமையான அனுபவங்கள் இருக்கும். மனைவியின் மகத்துவம் தெரியும் மாதம் இது. சிலருக்கு வாழ்க்கைத் துணையால் நன்மைகளும் ஆறுதலும் இருக்கும். 

1,2,4,8,10,13,15,17,18,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 3 -ம்தேதி பகல் 12.07 மணி முதல் 5 -ம் தேதி இரவு 11.27  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.