கும்பம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கும்பம்:

தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் கேது தனித்து இருப்பது தடைகளை கொடுக்கும் அமைப்புத்தான். இதோ  லாக்டவுன் வந்து விட்டதே.  ஆனாலும் ராசியில் குரு வலுவாக இருப்பது தடைகள் அனைத்தையும் விலக்கி யோகங்களை அளிக்கும் அமைப்பு.  இளைஞர்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் மாதம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பது இப்போது நிர்ணயிக்கப்படும்..


எட்டாம் அதிபதி புதன் ராகுவுடன் இருப்பதால் சிலருக்கு அடங்கிக் கிடக்கும் கடன் பிரச்னைகள் தலை தூக்கலாம். மருத்துவச் செலவுகளும் இருக்கும். உடல்நலத்தில் கவனமுடன் இருக்கவேண்டிய மாதம் இது. சிலருக்கு வீட்டுக்கடன் வாடகை குத்தகைப்பணம் வழிகளில் தொல்லைகள் வரும்.

கிரக நிலைகள் இளைஞர்களுக்கு சாதகமாக இருப்பதால் கோரனா பாதிப்புகளையும் மீறி இந்த மாதம் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் மாற்றம் நடைபெறும் மாதம் இது.

ஒரு முக்கிய பலனாக சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது. தந்தை வழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள்.

பனிரெண்டில் இருக்கும் சனியால்  சில கும்ப  ராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும், பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், பணத் தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. ராசிநாதன் சனி சொந்த வீட்டில் விரயத்தில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள். வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு நிலையான வேலை அமைப்புகளும், குறைவில்லாத பணவரவும் அமையும் என்பதால் ஜூன் மாதத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.

2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 18 -ம்தேதி காலை 4.07 மணி முதல் 20-ம்தேதி காலை 7.42 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.