MEENAM : 2020 RAGHU-KETHU PEYARCHI – மீனம்: 2020 ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மீனம்:

(பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

மீன ராசிக்காரர்களுக்கு தற்போது நான்கு, பத்தாமிடங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் மிகவும் நற்பலன்களை தரக்கூடிய மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாற இருக்கிறார்கள். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்ல பலன்களை அடையப் போகும் ராசிகளில்


கடந்த காலங்களில் வீடு, வாகனம், உயர்கல்வி, தாயார் நலம், தன் சுகம் ஆகிய பலன்களை காட்டக் கூடிய நான்காமிடத்தில் இருள் கிரகமான ராகு அமர்ந்திருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மேற்கண்ட விஷயங்களில் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் எதுவும் நடைபெற வில்லை.

குறிப்பாக வசதி இல்லாத வீட்டில் இருந்து வந்த நிலைமை, சொந்த வீட்டுக் கனவு இழுத்துக் கொண்டே போகுதல், தாயார் வழி விஷயங்களில் தடைகளும், தாமதங்களும், அம்மா சம்பந்தபட்ட விஷயங்களில் எதிர்மறை பலன்கள், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை, உயர்கல்வி கற்க தடை, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறை ஆகியவை நான்காமிடத்தில் இருந்து வந்த ராகுவால் நடந்து கொண்டிருந்தன.

மேற்கண்ட சாதகமற்ற பலன்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மாறுதல் அடைந்து அனைத்திலும் இருக்கும் தடைகள் உங்களுக்கு நீங்கும்.

குறிப்பாக தன்னுடைய 18 ஆண்டுகால ஒரு முழுச் சுற்றில் ராகு-கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் மட்டுமே நற்பலன்களை தருவார்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதாவது தன்னுடைய சுற்றுப் பாதையில் வெறும் நான்கரை ஆண்டு காலம் மட்டுமே ஒரு மனிதனுக்கு நன்மைகளை தரக்கூடிய விதத்தில் ராகு-கேதுக்கள் அமர்வார்கள். அதில் மிக முக்கியமான ஒரு அமைப்பு மூன்றாமிடமாகும்.

எனவே 18 ஆண்டுகளுக்கு மட்டுமே வரக் கூடிய மூன்றாமிட ராகு தற்போது மீன, ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடு என்பதாலும் இம்முறை மீனத்திற்கு நற்பலன்கள் நன்றாகவே இருக்கும்.

அடுத்து ஒன்பதாமிடத்திற்கு மாற இருக்கும் கேது அவர் மாறப்போகும், சிலருக்கு ஆன்மிக எண்ணங்களை கூடுதலாக தருவார். கேது நல்ல அமைப்பில் இருக்கும் போது ஒரு மனிதனுக்கு ஆன்மிக அனுபவங்கள் தூக்கலாக இருக்கும் எனும் விதிப்படி. தற்போது மாற இருக்கும் கேதுவின் அமைப்பினால் உங்களுக்கு நல்ல ஆன்மிக அனுபங்கள் ஏற்படும்.

பாக்கிய ஸ்தானத்திற்கு வரப் போகும் கேதுவால் இதுவரை கிடைக்காத சில பாக்கியங்கள் உங்களுக்கு இப்போது கிடைக்கும். அவரவர்களின் வயதிற்கேற்ப அந்த வயதிற்குரிய நல்ல அமைப்புகள் இப்போது நிறைவேறும். எதுவும் கிடைக்க இருந்து வந்த தடைகள் விலகும்.

ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்கப் போகும் குருப்

இதன் மூலம் உங்களுடைய சிந்தனை தெளிவாகும். திட்டமிடல் நன்றாக இருக்கும். எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்கமுடன் யோசித்து சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எனவே எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி’

ராகு, கேது பெயர்ச்சியும், குருப் பெயர்ச்சியும்தான் உங்களை சந்தோஷப்படுத்தப் போகிறது என்றால் ஏற்கனவே கோட்சாரத்தில் முக்கிய கிரகமான சனி லாப ஸ்தானம் எனப்படும் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் இன்னும் மூன்று வருடங்களுக்கு கோட்சார ரீதியில் மீனத்திற்கு மிகுந்த சாதகமான

அதேநேரத்தில் கோட்சார பலன்கள் என்பவை பொதுவானவைதான். ஒரு மனிதனுக்கு நடக்க இருக்கும் நல்ல கெட்ட சம்பவங்களையும், நன்மை தீமைகளையும் உறுதியாகச் சொல்பவை அவனது பிறந்த ஜாதக அமைப்புப்படி நடக்க இருக்கும் தசாபுக்தி அமைப்புகள்தான்.

தசாபுக்தி பலன்களும், இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் கோட்சார பலன்களும் சரியான விதத்தில் நன்மையாக ஒன்று சேரும் போது ஒரு மனிதன் சந்தோஷ வாழ்வின் உச்சத்திற்கு செல்ல முடியும். எனவே பிறந்த ஜாதகப்படி நல்ல தசா,புக்தி அமைப்பு நடப்பவர்கள் நான் சொல்லும் இந்த நன்மைகளை நூறு சதவிகிதம் அனுபவிப்பீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல அமைப்புகள் நடக்காதவர்களுக்கு பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும்.

மேலும் இந்த வருட இறுதி முதல் ராகு உங்களுடைய ராசிநாதனான குருவின் பார்வையில் இருப்பார். பார்க்கும் கிரகத்தின் பலனை அப்படியே தரக்கூடிய ராகுவால் வருகின்ற நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நன்மைகளும் மேன்மைகளும் நடைபெற இருக்கின்றன. குருவின் பார்வை சுமார் ஒரு வருட காலம் வரை ராகுவுக்கு

இந்தப் பெயர்ச்சியின் மூலம் அடுத்த ஆண்டு முதல் நீங்கள் தொழில், மற்றும் வேலையில் நிலை கொண்டு, நிறைந்த லாபத்தையும் நல்ல பலனையும் பெறுவதற்கான அஸ்திவார அமைப்புகளை இந்த ஆண்டே ராகு செய்து தருவார். எனவே இந்த ராகு, கேதுப்பெயர்ச்சியின் மூலம் முதல்தரமான நன்மைகளை மீன ராசிக்காரர்கள் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி.

ராகு மூன்றாமிடத்தில் நிலைகொள்வதால் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப்பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று மிகச்சிறந்த நல்லமுடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள்.

மேலும் இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத இளையபருவ மீனராசிக் காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

ஏற்கனவே எந்த ஒரு விஷயத்திலும் காலூன்றி நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் தங்கள் துறைகளில் நிலைபெற முடியும். குறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்களின் செயல்திறன் நல்லவிதமாக வெளிப்பட்டு சாதனைகளும் செய்வார்கள்.

ராகு நல்லநிலையில் இருக்கும் போது கேது அதற்கு எதிரான சாதகமற்ற நிலையில் இருப்பார் என்றாலும், தற்போது பத்தாமிடத்தில் இருந்து ஒன்பதிற்கு மாறும் கேதுவால் உங்களுக்கு எவ்வித தொல்லைகளும் இருக்காது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

பொதுவாக ஒன்பதாமிடத்துக் கேது பாபத்துவம் அடைந்தால், தந்தையார் வழியில் கெடுபலன்களையும், தந்தைவழி உறவினர்கள் மூலம் வீண் விவகாரங்களையும், பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலைமையையும் அதிர்ஷ்டம் குறைகின்ற நிலைமைகளையும் தருவார். ஆனால் இம்முறை விருச்சிகத்தில் உள்ள கேது எவ்வித கெடுபலன்களையும் தராமல் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.

கேதுவின் பலனாக சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பும், இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாடும் இருக்கும். சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேது தருவார்.

தள்ளிப்போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் பயணங்களும் தற்போது கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை

அந்தஸ்து, கௌரவம், மேம்படுவதோடு வருமானம், பணப்புழக்கம் ஆகியவைகள் சரளமாக இருக்கும். நான்குபேர் இருக்கும் இடத்தில் பளிச்சென தனித்து தெரிவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடி வரும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்..

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை

பரிகாரங்கள்:

வேலூர் வாலாஜாபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். அங்கே மகான் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து பிரச்னைகளும் பஞ்சாய் பறந்து போகும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.