குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (13-04-2020 முதல் 19-04-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

மேஷத்தினர் வெளியில் செல்லும் போது கவனம் தேவை. அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்.வீட்டிலேயே இருங்கள். சிறப்பு பலனாக வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதையும் நிதானமாக சிந்திப்பது நல்லது. குறுக்குவழி வேண்டாம். எதிலும் அவசரப்பட வேண்டாம். சிக்கல்கள் எதிலாவது சனியுடன் சேர்ந்த செவ்வாய் மாட்டி வைப்பார். அனைத்து விஷயங்களும் இழுத்துக் கொண்டே போய் மே மாத இறுதியில்தான் நன்றாக முடியும். 

பொறுமை தேவைப்படும் வாரம் இது. மே மாதம் மூன்றாம் தேதி வரை குரு,சனி, செவ்வாய் மூவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த கிரகநிலையால் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மருத்துவம் சம்பந்தபட்டவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.

ரிஷபம்:

இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த ரிஷபத்தினர் இந்த வாரம் வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசியத் தேவைகளைத் தவிர வேறு

எதற்கும் வெளியில் செல்ல வேண்டாம். மற்றபடி பிரச்னைகள் இல்லாத வாரம்தான் இது. உங்களில் சிலருக்கு வீட்டில் உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வெகுநாட்களாக தவற விட்ட உறவுகளை இப்போது உணருவீர்கள். சிலர் மறந்து விட்ட தொலைபேசி எண்களை தேடி எடுத்து நட்பு, உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள். 

வீட்டிலேயே இருப்பதால் கல்லூரி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் விஷயத்தில் சண்டைகள் வரலாம். தலைமுறை இடைவெளி என்பதை இப்போது உணருவீர்கள். வாரம் முழுவதும் சந்திராஷ்டமம் போலத்தான் என்பதால் தனியான சந்திராஷ்டம நாளுக்கு விசேஷமில்லை. 12-ம்தேதி இரவு 7.12 முதல் 15-ம்தேதி அதிகாலை 1.57 மணி வரை சந்திராஷ்டம நாட்கள். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு விஷயத்தில் நல்ல தகவல் உண்டு.

மிதுனம்:

வீட்டிற்குள்ளேயே இருந்தால் மிதுனத்திற்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் இல்லை. இந்த மாதம் முழுவதும் இது நீடிக்கும். வெளியில் சென்றால் நிச்சயம் பிரச்னைதான். செவ்வாய், சனி, குரு சேர்க்கை

மே முதல்வாரம் வரை உள்ளதால் காக்கிச்சட்டையால் இளைஞர்கள் சிலருக்கு அவமானங்கள் உண்டு. ஆயினும் பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. சில நிலைகளில் மன்னித்து விடப்படுவீர்கள். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம். மிதுனம் கவனமுடன் இருக்க வேண்டிய வாரம் இது.

ராசிநாதன் நீச்ச நிலையில் இருப்பதால் எதிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும். கைப் பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. செல்போனை மறதியாக எங்காவது விட்டுவிட்டு தேடிக்கொண்டிருப்பீர்கள். வாரம் முழுவதும் சந்திராஷ்டமம் போலத்தான் என்பதால் தனியான சந்திராஷ்டம நாளுக்கு விசேஷமில்லை. 15-ம்தேதி அதிகாலை 1.57 முதல் 17-ம்தேதி பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சந்திரன் பாபியருடன் சேர்ந்த நிலையில் இருப்பதாலும், சனியுடன் சேர்ந்த உச்ச செவ்வாயின் பார்வை ராசியில் விழுவதாலும் டென்ஷனாக இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். உங்களில் பெரும்பாலோனோருக்கு வருமானம் இல்லாத நிலையில் செலவுகளும்,

விரயங்களும் ஏற்படும். எதிலும் கவனமாக இருங்கள். அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்.

பண வரவு இருக்காது. கடன் வாங்கியாவது சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் இது. சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது

வாட்ஸ் அப்பில் சந்திப்பீர்கள். முகநூலில் சிலருக்கு இனிமையான அனுபவங்கள் இருக்கும். வாரம் முழுவதும் சந்திராஷ்டமம் போலத்தான் என்பதால் தனியான சந்திராஷ்டம நாளுக்கு விசேஷமில்லை.

17-ம்தேதி பகல் 12.17 முதல் 20-ம்தேதி இரவு 12.38 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத வாரம் இது. வெளியே போக முடியாமல் வீட்டிலேயே இருப்பதால் ஒரு ஜெயில் கைதியைப் போல உணருவீர்கள். நினைத்ததை நினைத்தார்போலவே செயல்படுத்த முடியாது. கைகள் கட்டப்பட நிலையில் நீங்கள் இருக்கும் வாரம் இது. ஆறில் சனி, செவ்வாய், குரு கூடுவதால் இந்த மாதம் முழுவதும் குழப்பங்கள் இருக்கும். உங்களில் சிலர் கடினமான வேலைகளை எடுத்துச் செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

 இளைய பருவத்தினருக்கு வெளியே சிக்கல்கள் காத்துக் கொண்டிருக்கும். அவசியமின்றி வெளியே போகாதீர்கள். காவல்துறை இரக்கம் காட்டாது. வம்புகள் தேடி வரும் வாரம் இது. உங்களில் சிலர் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். பதினொன்றில் ராகு வலுவாக இருப்பதால் வருமானமே இல்லாத நிலையில் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். வீட்டிலேயே

இருக்கும் குடும்ப உறுப்பினர்களால் மறைமுக தொல்லைகள் வரும்.

கன்னி:

ராசிநாதன் புதன் நீச்சநிலையில் இருப்பதால் கன்னியினருக்கு மனக் குழப்பங்கள் அதிகரிக்கும் வாரம் இது. கொரோனா தயவினால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலையினை மனஉறுதியுடன்

சமாளிப்பீர்கள். உங்களில் சிலருக்கு அனைத்து விஷயங்களிலும் இப்போது நெருக்கடிகள் இருக்கும். அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். மே மாதம் நான்காம் தேதி வரை இப்போதைய நிலை மாறாது. 

இருக்குமிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி கோபப்படும் சூழல் உருவாகும். வாரம் முழுவதும் அவரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால்

செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு சந்தோசம் இருக்கும். சிலநேரம் குழந்தைகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் எரிச்சல் அடைவீர்கள். துன்பத்திலும் இன்பம் காணும் வாரம் இது.

துலாம்:

நான்காமிடத்தில் குரு, சனி, செவ்வாய் கூடுவதால் இன்னும் சில வாரங்களுக்கு வருமானங்கள் இன்றி விரையங்கள் மட்டும் உண்டு. கொரோனா பயத்தினால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய

நிலைமை என்பதால் கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆண்கள் பெண்களுக்கு அடங்கிப் போக வேண்டியிருக்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். இன்னும் சில வாரங்களுக்கு இந்த நிலைமைதான். 

காவல்துறையால் உங்களில் சிலருக்கு தலைக்குனிவு இருக்கும். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய அளவில் இருமல் என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்காக வீதிக்கு வர வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தினர் எல்லோரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு தலைவலி தரும் சம்பவங்கள் இருக்கும்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டிலேயே இருந்து தங்களின் பொறுமையை அடுத்தவர்களுக்கு காட்டும் வாரம் இது. வார இறுதியில் சூரியன் ஆறாமிடத்திற்கு மாறுவது சாதகமற்ற நிலை என்று தோன்றினாலும் அவர் உச்ச வலுவாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் வாரம் வராது. அதேநேரம் உங்களில் சிலர் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல் அவஸ்தைப்படுவீர்கள். அடிக்கடி எரிச்சல் படுவீர்கள். 

மே நான்காம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும்.  வருமானம் இல்லாமல் நிறைய செலவுகளும் விரயங்களும் இருக்கும். வயதானவர்களை வீட்டில்

வைத்திருப்பவர்கள் அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு இது நல்ல வாரம். இதுவரை உங்களை, உங்களின் திறமைகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். விருசிகத்தினர் வீட்டினுள் நிம்மதி காணும் வாரம் இது.

தனுசு:

சனி, செவ்வாய் சேர்க்கையால் இதுவரை கிடைக்காத சில அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். தனுசுவினருக்கு வாழ்க்கையைப் புரிய வைக்கும் வாரம் இது. எவர் பேச்சைக் கேட்காமல் சுதந்திரமாய்

திரிந்தவர்களுக்கு இப்போது வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது தாங்க முடியாத கொடுமையாக இருக்கும். இன்னும் சில வாரங்களுக்கு பொறுமை தேவைப்படும் வாரம் இது. மே நான்காம் தேதி வரை நிலைமை இப்படித்தான்.

வீட்டிலேயே இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் உங்களின் பலவீனங்கள் தெரிய வரும். சிலருக்கு மனைவியின் அருமை புரியும். உங்களின் தொந்தரவு தராத தன்மையால் மட்டுமே மனைவியால்

மதிக்கப்படுவீரகுள். அக்கம் பக்க வீட்டாருடன் வீண் அரட்டை வேண்டாம். கொரோனா வைரஸ் பீதியை விட கண்கொத்திப் பாம்பாக சுற்றும் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும். கண்டிப்பாக நண்பர்களுடன் சேர்ந்து வெளியே போக வேண்டாம்.

மகரம்:

மகர ராசியினருக்கு எரிச்சல் தரும் வாரம் இது. உங்களில் இளைஞர்கள் எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ விஷயத்தை தவிர்த்து வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம். வீதிக்கு வரும் முன் பத்து தடவை யோசியுங்கள். முகத்தையும் மூட மறக்க வேண்டாம். மே நான்காம் தேதி வரை இந்த நிலைமைதான். 

குழந்தைகளின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். உறவுகள் மற்றும் நட்புகளைப் பற்றி புரிய வரும் வாரம் இது. வெகுநாட்களாக கிடைக்காத சில அனுபவங்கள் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. உங்களில் சிலர் பிறரிடம் உதவியை எதிர்பார்ப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். அவசியமின்றி வெளியே நண்பர்களுடன் செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். சிலருக்கு காவல்துறையால் தொல்லைகள் உண்டு.

கும்பம்:

வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலைமை வரும் மே மாதம் முதல் நடக்க இருக்கும் கிரகப் பெயர்சிகளால் மாறும். ஏப்ரல் இறுதி வாரம் முதல் கும்பத்திற்கு நன்மைகள் நடக்கும். ராசிநாதன் சுபத்துவமாக இருப்பதால் அடுத்து வரப்போகும் வாரங்கள் யோக வாரங்கள்தான். சுக்கிர நிலையால் சிலருக்கு வீண் செலவுகளும் இருக்கும். வருமானம் இருக்காது குறிப்பிட்ட ஒருபலனாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணமடைவார்கள். கொரோனா வைராசால் உங்களுக்குப் பாதிப்பு இல்லை.

உங்களில் சிலர் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். எரிச்சல் தரும் வாரம் இது. எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும்.

அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். மே மாதம் நான்காம் தேதியன்று செவ்வாய், சனி இணைவு விலகும் வரை இந்த நிலை நீடிக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயத்தில் பொறுமை தேவைப்படும் வாரம் இது. வீட்டிலேயே இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும், குணங்களையும் புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையால் சந்தோஷமும், உற்சாகமும் இருக்கும். அதேநேரம் எல்லை மீறும் சில விஷயங்களால் வீட்டில் கருத்து வேறுபாடுகளும் வரும். இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் வெளியில் செல்வதால் சங்கடங்கள் உண்டு. அவசியத் தேவைகளின்றி வெளியே செல்ல வேண்டாம்.

சனி சுபத்துவமாக இருப்பது உங்கள் ராசிக்கு நல்ல அமைப்பு. வீட்டிலேயே இருப்பதால் ஆண்களை வேலை வாங்க பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரும். உங்களின் வீட்டு நிர்வாகம் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வெளியே செல்ல முடியாத தடைகளை உங்களால் சுலபமாக

சமாளிக்க முடியும். மே மாதம் நான்காம் தேதி செவ்வாய், சனி இணைவு விலகும் வரை இந்த நிலை நீடிக்கும். பணம் பற்றிய புரிதல்கள் வரும் வாரம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.