குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (14-10-19 முதல் 20-10-2019 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மேஷத்திற்கு யோக வாரம் இது. இந்த வாரம் பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் நன்மையும் இருக்கும். உடல்நலமில்லாமல்  இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். இதுவரை சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு துரத்துவீர்கள். எதிர்ப்புகள் பலவீனமாகும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். செலவுகளில் சிக்கனமாக இருங்கள். அதிக வருமானம் வரும் நேரம் என்பதால் ஓரளவாவது சேமிப்பது நல்லது.


இன்னும் மூன்று வாரங்களில் ராசியைக் குரு பார்க்கப் போவதால் மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து நன்றாக இருக்கும். சிலர் எதிர்காலத்தில் சாதிக்க போகும் துறையினை தேர்ந்தெடுப்பதும், இன்னும் சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நபர்களை சந்திப்பதும் இந்த வாரம் நடக்கும். பெண்களால் சாதகமான பலன்கள் நடக்கும். சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் உண்டு. சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கும் பயணம் செய்வீர்கள். அது ஆன்மிகப் பயணமாக இருக்கலாம். 

ரிஷபம்:

வார ஆரம்பத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் பவுர்ணமி நிலையில் பதினொன்றில்  இருப்பதால் இந்தவாரம் ரிஷபத்தினருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து  ஆதரவு கிடைக்கும். என்னதான் அடுத்தவர் உதவினாலும் நம்முடைய கை உழைத்தால்தான் நமக்கு நிம்மதி என்று நினைக்கக்கூடிய உங்களுக்கு இது திருப்பம் தரும் வாரம்தான். மருத்துவத்துறையினர், அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் கட்டிடம் கட்டும் தொழில் சம்மந்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இந்த வாரம் பணவரவு இருக்கும்.  கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு நன்மைகள் இருக்கும்.

எட்டுக்குடைய குரு எட்டாமிடத்திற்கு மாற இருப்பதால் இப்போது சிலருக்கு இடமாற்றம் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். சகோதர உதவி உண்டு. குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

மிதுனம்:

இன்னும் மூன்று வாரங்களில் ராசியை குரு பார்க்கப் போவதால் உங்களின் மனோபலம் அதிகமாகும் வாரம் இது. தடைப்பட்டிருந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் இனி செயல்படத் துவங்கும். அலுவலகங்களில் நிம்மதியான சூழல் இருக்கும் என்றாலும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்று நினைத்து தேவையில்லாமல் பயந்து கொண்டிருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றைக்குமே மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் பயம் தேவையே இல்லை. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.

அஷ்டமச் சனி நடக்க இருப்பதால் இப்போதிருந்தே இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதிவேலை முடிந்து விட்டதாக அர்த்தம். சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். எதிர்பார்க்காத பணவரவும் உண்டு. சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக வார ஆரம்பத்தில் அப்பா விஷயத்தில் நன்மைகளோ, தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக சம்மதிக்காத ஒரு விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன் இருக்கும்.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் பூரண நிலையில் ஒன்பதாமிடத்தில் இருப்பதோடு, குருவின் பார்வையும் அவருக்கு இருப்பதால் இது கடக ராசிக்காரர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும் வாரம். குறிப்பாக கடகத்திற்கு பணப்பற்றாக்குறை நீங்கி லாபங்கள் வருகின்ற வாரம் இது. யோகாதிபதி செவ்வாயும் வலுவாக உள்ளதால் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் இருப்பீர்கள். பெண்கள் சிலருக்கு நகை சேரும் யோகம் இருக்கிறது. பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு இனி நல்லவைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் தொந்தரவுகள் இருக்காது.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் மிகச்சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்னைகளை சந்தித்தவர்கள் அது நீங்குவதை உணர ஆரம்பிப்பீர்கள். நீண்டகால பகை ஒன்று தீர்ந்து சமரசம் ஆவீர்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். தன்னம்பிக்கையோடு கடகத்தினர் சாதிக்கும் வாரம் இது.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் நீச்ச வலுப்பெற்று பலவீனமாகும் வாரம் இது. சூரியனின் நீச்சத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் நல்ல பலன்களை தராது என்பது ஜோதிட விதி. ஆயினும் சூரியன் நீச்சபங்கமடைந்தால் சாதகமான பலன்கள் சிம்மத்திற்கு நடக்கும். இந்த மாதம் முழுவதும் கூடவே இருக்கும் ஆட்சி பெற்ற சுக்கிரனால் சூரியன் நீச்சபங்கத்தை அடைவதால் இந்த வருடம் ஐப்பசி மாதம் சிம்மத்திற்கு தொல்லைகள் எதுவும் தராது. எனவே சிம்மத்திற்கு இந்த வாரம் குறைகள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை.

ராசிநாதன் நேர்வலு இழப்பதால் அனைத்து நன்மைகளும் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் நடக்கும் என்பதால் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது.   19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி இரவு 10.26 முதல் 14-ம் தேதி காலை 10.20 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் வலுப்பெறுவதால் இது கன்னிக்கு  நன்மைகளை தரும் வாரம். இதுவரை ஆரோக்கியம் இல்லாமல் இருந்த கன்னி  ராசிக்காரர்கள் அந்த நிலை நீங்கி உடல்நலம் திரும்ப கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்த கன்னி ராசிக்காரர்களுக்கு இனி அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு கடன்கள் இந்த வாரத்தில் அடைபடும். கிரக அமைப்புகள் சாதகமான நிலையில் இருப்பதால் இனிமேல் கன்னிக்கு சோதனைகள் எதுவும் இல்லை.

இளையபருவத்தினர் சிலர் எதிர்மறை பலன்களால் தன்னம்பிக்கை இன்றி இருப்பீர்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல நல்ல நிகழ்ச்சிகள் இந்த வாரம் உண்டு. சிலருக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் மாறும். 18, 19, 20 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி காலை 10.20 முதல் 16-ம் தேதி இரவு 8.46 வரை சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் வீண்வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாகி நல்ல நிலைமையில் இருப்பதோடு அவரது பகைவரான சூரியன் அவருடன் ராசியில் நீச்சம் பெற்றிருப்பதால் நீங்கள் எதிரிகளை அடக்கும் வாரம் இது. துலாத்தின் உயரமும் பெருமையும் இப்போது மற்றவர்களுக்குத் தெரிய வரும். வீண் செலவுகள் இல்லாத வாரம் இது. ராசியில் சுக்கிரன் இருப்பதால் பிரச்சினைகளை தீர்க்கின்ற மனோதைரியமும், சந்தர்ப்பங்களும் கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியாக நீண்ட தூர பிரயாணங்கள் உண்டு. பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். 18,19,21 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி இரவு 8.46 மணி முதல் 19-ம் தேதி காலை 5.23 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.  

விருச்சிகம்:

விருச்சிக ராசி இளைஞர்களுக்கு இந்த வாரம்  நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். இதுவரை தந்தையிடமிருந்து ஆதரவு இல்லாத நிலைமையும்  இனிமேல் சீர்படும். தேவையற்ற வழிகளில் வீண் செலவு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிர்காலத் தேவைக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பது நல்லது.

வீட்டில் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்லபலன்கள் உண்டு. சிலருக்கு புத்திரர்கள் மூலம் பணவரவு வந்து அதன் மூலம் ஏதேனும் வீடோ மனையோ வாங்கும் அமைப்பு உள்ளது.  பெண்கள் வகையில் நல்ல விஷயங்கள் நடக்கும். 19-ம் தேதி காலை 05.23 முதல் 21-ம் தேதி காலை 11.40 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

தனுசு:

தனுசு ராசியினரின் பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உடல்நலம், மனநலம் கெட்டிருந்தவர்கள் அனைத்தும் சீர் பெற்று நல்ல நிலைக்கு வருவீர்கள். சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கத் துவங்கும் வாரம் இது. மூன்றாவது மனிதரால் குழப்பங்கள் உருவாகி கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, அண்ணன்-தம்பி சண்டை போன்றவைகள் ஏற்பட்டிருந்தவர்கள் வேற்றுமைகளைத் துறந்து ஒன்று கூடுவீர்கள். துன்பங்கள் தீரப் போகும் வாரம் இது.  

அனைவருக்கும் இது கெடுதல்கள் இல்லாத வாரமாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் அலுவலகங்களில் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். ஏழரைச் சனி நடப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினமாக இருக்கும்.  அவசரப்பட்டு யாருக்கும் உதவி செய்வதாகவோ பணம் தருவதாகவோ வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்றுவது கடினம். குடும்பத்தில் முட்டல், மோதல் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.  

மகரம்:

உங்களில் முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இனிமேல் மாறுதல்கள் இருக்கும். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவீர்கள். இளைய பருவத்தினர் எதிலும் அகலக்கால் வைக்காமல் இருக்க வேண்டும். மகர ராசி இளைஞர்கள் இருக்கும் வேலையில் இருந்து மாறுவதற்கு முன் ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும். முன் யோசனை இன்றி எதுவும் செய்தால், இப்போது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடும்.

மகர ராசியினர் இப்போது கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் செலவுகளும், விரயங்களும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜென்மச்சனி ஆரம்பிக்க இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று  காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.  

கும்பம்:

கும்பத்திற்கு இது நல்ல வாரமே. வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. கடன் தொல்லைகள் எல்லை மீறாது. அதே நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் இழுத்தடித்துத்தான் வரும். ஏதேனும் சச்சரவு வரலாம் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிலும் நிதானம் தேவை. சிலருக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலை  மாறும். முயற்சி எடுத்தும் பயன் இல்லாமல் போன விஷயங்கள் இந்த வாரம் பலனளிக்கும்.

என்னதான் நல்லபலன்கள் நடந்தாலும் இன்னும் சில வாரங்களில் ஏழரைச் சனி ஆரம்பிக்க இருப்பதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போன்ற நிலை இருக்கும். கவலைப்படும் அளவிற்கு எந்த சோதனையும் வந்து விடப்போவது இல்லை. ராசிநாதன் வலுவாக இருப்பதோடு, பாக்யாதிபதியும் வலுவாக இருப்பது சாதகமற்ற பலன்களை தடுத்து நிறுத்தும் ஒரு அமைப்பு. பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சிறப்படைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் கும்பத்தினருக்கு நல்ல செய்திகள் உண்டு. பெண்களை இந்த வாரம் நம்பலாம்.

மீனம்:

ராசிநாதன் குரு  வலுவாக இருப்பதால் இளைய பருவத்தினருக்கு படிப்புக்கு ஏற்ற இடத்தில் வேலை கிடைக்கும். எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும். இளைஞர்களுக்கு திருப்பங்கள் இருக்கும். இதுவரை உயர்படிப்பு படிக்கவோ, அரசுத்தேர்வு எழுதவோ இருந்த தடைகள் விலகி விட்டன. மீனத்தினர் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு. வேலை விஷயமாகவோ கருத்து வேறுபாட்டாலோ, பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் சேர்வீர்கள். குழந்தைகள் உங்களின் சொல்பேச்சை கேட்டு நடப்பார்கள்.

மூன்றாமிடம் வலுப் பெறுவதால் உதவிகள் தேடிவரும். நீங்களும் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தொந்தரவு கொடுத்த மேலதிகாரி மாறுதலாகி சாதகமானவர் அந்த இடத்திற்கு வருவார். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். அரசுத்துறையில் இருக்கும் மீன ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள்.  வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு தாராள பணவரவு உண்டு. எழுத்துத்துறையினர், ஊடகத்தினர், கணக்கு, சாப்ட்வேர் போன்றவர்களுக்கு வருமானம் இருக்கும்.

(14.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whats app ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.