குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (12.08.19 முதல் 18.08.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

உங்களில் அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங் கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள்.  ஒன்பதாமிடத்தில் இருக்கும் சனி, கேதுவால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இப்போது  அவற்றை முடிப்பீர்கள். 


தந்தை வழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக அரசுத் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கும் நல்ல பலன்கள் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். தொழில் விஷயமாக பிரயாணம் செல்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷபத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத வாரம் இது. இந்த வாரம் முதல் நான்காம் அதிபதி சூரியன் ஆட்சிநிலை பெறுவதால் உங்களில் கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் செல்லும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள்  நல்லபடியாக கிடைக்கும்.

தொழில் செய்யும் இடங்களில் தொல்லைகள் இருக்காது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். செவ்வாய் சுக்கிரன் இனைவால் சிலருக்கு ஒருபக்கத் தலைவலி போன்ற  பிரச்னைகள் இருக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை. 14,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 11.05 மணி முதல் 13-ம் தேதி காலை 9.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் கடந்த சில வாரங்களாக இருந்து வந்த தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளி வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டிய வாரம் இது. கேதுவுடன் இணைந்துள்ள சனி ராசியைப் பார்ப்பதால் சிலருக்கு வருமானத்தில் தடை இருக்கும். இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் அதிக நன்மையை அடையப்போகும் முதன்மை ராசி மிதுனம் என்பதால் கவலைக்கு இடமில்லை. மிதுன ராசிப் பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

செவ்வாய், சுக்கிரன் மூன்றில் இணைவதால் சாதாரண சிறு விஷயத்திற்காக கணவரிடம் சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதம் வேண்டாம். நிதானம் தேவை. எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். 15,16,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி காலை 9.26 மணி முதல் 15-ம் தேதி இரவு 9.27 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது.

கடகம்:

கடக ராசி இளைஞர்களின் செயல் திறன் இந்த வாரம் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கணவன்-மனைவி உறவுகள் மூலமாக நன்மைகள் நடக்கும். அலுவலகங்களில் தொல்லைகள்  இருக்காது. உங்களில் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் தொழில் போன்றவை லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இது நல்ல வாரம். தொழில் இடங்களில் நல்ல பெயர் வாங்கும்படியான  சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

ராஜ கிரகங்கள் வலுவுடன் இருப்பதால் எது வந்தாலும் சமாளிப்பீர்கள். புத்திசாலி பொதுநலவாதிகளான கடக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் எதுவும் இல்லை. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால்  நன்மைகள் உண்டு. 17,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி இரவு 9.27 மணி முதல் 18-ம் தேதி காலை 10.10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

ராசிநாதன் ஆட்சிநிலை பெறுவதால் சிம்மத்திற்கு இந்த வாரம் எதிலும் வெற்றிதான். அனைத்து சிறப்புக்களும் சேரும் வாரம் இது. உங்களில் பூரம்  நட்சத்திரத்தைச் சேர்ந்த குழந்தைப் பேறு இதுவரை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பற்றிய நற்செய்திகள் உண்டு. சிலருக்கு இரட்டைக் குழந்தை அமைப்பு தெரிய வரும். செலவுகளும், வீண் விரயங்களும் உள்ள வாரம் இது. சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும். குறை சொல்ல முடியாத வாரம் இது.

மகம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்க்கும் இடத்திலிருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகும். என்னதான் தடைகள் என்றாலும் யோகாதிபதிகள் வலுப்பெறுவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள்.  நண்பர்களே உங்களின் கோபம் பிடிக்காமல் விலகிப் போக வாய்ப்பு  இருக்கிறது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்டநாட்கள் போராடிக்கொண்டு இருந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து லாபங்களும், பண வரவும் கிடைக்கும் வாரம் இது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு தொழில் சிறிது தேக்கத்தை கொடுத்தாலும் முடிவில் நன்மையாகவே அமையும். ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரலாம் என்பதால் யோசித்து செயல் படுவது நல்லது.

ராசிநாதன் வலுப் பெற்ற நிலையில் சிலவாரங்கள் இருப்பார் என்பதால் குடும்பத்தில் சந்தோஷங்கள் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும் அவர்களால் பெருமைகளும் இருக்கும். மகன். மகளுக்கு திருமண உறுதி நிகழ்ச்சிகள் நடக்கும். யோகம் தரக்கூடிய  கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள்.

துலாம்:

உங்களில் சிலருக்கு அருமையான வாகனம் அமையும் வாரம் இது. தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியான நேரம் என்பதால் இதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். பனிரெண்டாம் இடம் வலுப் பெறுவதால் வீண் செலவுகளும் விரயங்களும் இருக்கும். பயணம் செல்வீர்கள். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும். உறவினர்கள் உதவுவார்கள்.

உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. ஆறில் செவ்வாய் இருப்பதால் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நல்லது. அரசு ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் எவ்வித தடைகளும் இல்லாமல் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் இருக்கும். தொந்தரவுகள் எதுவும் வராது. பொருளாதார விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தவர்கள் அது நீங்கி நல்ல வருமானமும்,  பணவரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம்  வருத்தங்கள் எதையும் தராமல் வசந்தத்தையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும். விருச்சிகத்திற்கு இனிக் கஷ்டங்கள் எதுவும் இல்லை.

மருத்துவத்துறையினர், சிகப்பு நிறம் சம்மந்தப்பட்டவர்கள், கையில் ஆயுதங்களை கொண்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். இப்போது அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இனி தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். நிதானமாக இருப்பதன் மூலம் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். எதையும் நீங்கள் சமாளிக்கும் வாரம் இது.

தனுசு: 

ஏழரைச் சனியின் காரணத்தால் தனுசு ராசி இளைஞர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாரம் இது. உங்களில் பூராடம் நட்சத்திரக் காரர்கள் அதிகமாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சில வாரங்களில் நல்ல மாற்றம் தெரியும். பொறுத்திருங்கள். சிலருக்கு சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும்.

வாரத்தின் பிற்பகுதி நாட்கள் பிரச்னைகளை நீக்கி நிம்மதியை தரும். இளைஞர்கள் சிலருக்கு பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்ல வேண்டியிருக்கும். எவரிடமும் வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புகள் இருக்கும். சிலர் அக்கா தங்கைகளுடன் சண்டை போடுவீர்கள். எதையும் தாமதமாகத்தான் செய்து முடிக்க முடியும். ஆனாலும் எதுவும் எல்லை மீறி போகாமல் பரம்பொருள் காப்பாற்றுவார்.

மகரம்:

உங்களில் சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று அம்மாவின் மூலம் ஏதேனும் கிடைக்கும் வாரம் இது.  யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. மகர ராசிக்கு இந்தவாரம் கஷ்டங்கள் என்று எதுவும் இல்லை. அனைத்திலும் நல்லது மட்டுமே நடக்கும். உங்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு தந்தைவழி உறவில் கசப்புகளும், கருத்து வேற்றுமைகளும் ஏற்படும்.

உங்களுடைய பிடிவாத குணத்தால் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாத சூழ்நிலை இருக்கும். தொழில் விஷயத்தில் சங்கடங்கள் இருந்தாலும் முடிவில் அனைத்தும் சாதகமாகவே முடியும். வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் இருக்கும் சிக்கல்கள் உங்களை ஒன்றும் செய்யப் போவது இல்லை, வெளிநாட்டுத் தொடர்பு உள்ளவர்களுக்கு இது யோக வாரம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம்.

கும்பம்:

உங்களில் சிலருக்கு ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த விஷயங்கள் மீண்டும் கிளறப்படும் வாரம் இது. அடுத்து நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் உங்களின் ஒட்டுமொத்த பிரச்னைகளும் தீர ஆரம்பிக்கும் என்பதால் கும்பத்திற்கு இனி கவலைகளுக்கு இடமில்லை. ராசிநாதன் சனி  கேதுவுடன் இணைந்திருப்பதால் அடங்கியிருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைகுனிவை தரும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் மருத்துவரிடம் செல்வது நல்லது. 

தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். இதுவரை இழுத்தடித்த வேலை கிடைக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இப்போது கருவுறுதல் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும்.

மீனம்:

மீனத்திற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும் வாரம் இது. முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரப் பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் மாற்றங்கள் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாவதால் மீனத்திற்கு இந்த வாரம் கவலைகள் எதுவும் இல்லை. பணவரவு நன்றாகவே இருக்கும்.  

சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். முதல் திருமணம் முறிந்த சிலருக்கு இரண்டாவது திருமணத்திற்கான அமைப்புகள் உருவாகும். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள்.

(12.08.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.