மீனம்-2019 ஜூலை மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மீனம்:

ராஜயோகாதிபதி செவ்வாய் ஐந்தாமிடத்தில் நீசமாக இருந்தாலும், குருவின் பார்வையில் இருக்கிறார். இந்த அமைப்பு எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை தடுக்கும் கேடயமாக செயல்பட்டு உங்களை அனைத்திலும் காப்பாற்றும். ராசிநாதன் குரு ஒன்பதில் இருப்பதால் மீனத்திற்கு எதிலும் ஜெயம்தான். சாதகமான கிரக நிலைகளால் தொழில், குடும்பம் போன்றவைகளில் இருந்து வந்த சங்கடங்களும் சாதகமற்ற விஷயங்களும் இந்த மாதம் விலகும் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயலாற்றுவீர்கள். மீனத்தினர் இந்த மாதம் மனதளவிலும் உடல்நிலையிலும் பத்து வயது குறைந்த நிலையை அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.

மீனராசிக்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும் தாராளமான பணவரவு உள்ள மாதமாகவும் இது அமையும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.

பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள்  கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு  நன்மைகள் உண்டு. குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும்.

4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி அதிகாலை 4.45 மணி முதல் 12-ம்தேதி காலை 9.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.