தனுசு-2019 ஜூலை மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

தனுசு:

தனுசு ராசிக்கு நன்மைகள் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக ஐம்பது வயதினைக் கடந்த இரண்டாவது சுற்று பொங்கு சனியினைக் கொண்டவர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் நல்ல வருமானம் இருக்கும். ஜனனகால ஜாதகப்படி யோக தசா, புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் உண்டு. இளைய பருவத்தினர் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. ஜென்மச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது.

உங்களில் சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். ஏழாமிடத்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். பெண்கள் விஷயத்தில் நினைப்பது நடக்காது. வீண்செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதால் எதற்கும் கவலை வேண்டாம்.

வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிறு விஷயத்திற்கு கூட நீங்கள் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். கோபத்தைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஏதாவது தவறாக நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.

5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம்தேதி இரவு 11.09 மணி முதல் 6-ம்தேதி அதிகாலை 12.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.