கடகம்-2019 ஜூலை மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கடகம்:

லாபஸ்தானத்தை யோகாதிபதி குரு பார்ப்பதாலும், ஜீவனாதிபதி செவ்வாய் நீசமாக இருந்தாலும் குருவின் பார்வையில் இருப்பதாலும், இதுவரை தடையாகி வந்த உங்களின் தொழில் முயற்சிகள் இப்போது நிறைவேறும். செவ்வாயின் சுப வலுவால் கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது.

செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் கடன் வாங்கியாவது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கடகராசிப் பெண்கள் குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும் கோபப்படாமல் அமைதியாக பிரச்னைகளை சமாளியுங்கள். ஒரு பெண் நினைத்தால் எதையும் ஆக்கலாம் அழிக்கலாம் என்பது உலகவிதி. எந்தக் குடும்பத்தில் அதன் தலைமைப் பெண்மணி விழிப்புடன் இருக்கிறாளோ அந்தக் குடும்பத்தை எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம்.

சிலருக்கு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். அனைத்து விஷயங்களிலும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது.  ராசியில் செவ்வாய் உள்ளதால் தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி மதியம் 2.58 மணி முதல் 22-ம் தேதி அதிகாலை 3.40 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்களோ எந்த ஒரு புதியமுயற்சியோ இந்த நாட்களில் செய்வதை தள்ளி வைப்பது நல்லது.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.