சிம்மம்-2019 ஜூலை மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சிம்மம்:

ஜூலை மாத ஆரம்பத்தில் முதலிரண்டு வாரங்கள் ராசிநாதன்  சூரியன் ராகுவுடன் இணைந்து, வலு இழந்து ஒளி குறைந்த நிலையை  அடைவதால் மாதத்தின் ஆரம்ப நாட்கள் உங்கள் பொறுமையை சோதிப்பதாகவும் பிற்பகுதி நாட்கள் பிரச்சினைளை தீர்த்து நன்மைகளைத் தருவதாகவும் அமையும். அதேநேரத்தில் மற்ற கிரகங்கள் நல்ல அமைப்பில் உள்ளதால் சிம்ம ராசிக்கு துன்பங்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. சுக்கிர சேர்க்கை உள்ளதால் பெண்கள் விஷயத்தில் மட்டும் சற்றுத் தள்ளியே இருங்கள். மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். இராசிநாதன் பலவீனம் பெறுகிறார் என்பதால் சிலருக்கு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை இருக்கும்.  சில விஷயங்கள் இழுபறியாக தாமதமாக முடியும்.

பாக்கியாதிபதி செவ்வாய் நீசமானாலும் குரு பார்வை பெறுவதால் தடைபட்டிருக்கும் பாக்கியங்கள் அனைத்தும் உங்களின் வயதுக்கேற்ற வகையில் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணம், வேலை, புத்திரபாக்கியம் தாமதப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இப்போது மனமகிழ்ச்சி உண்டு. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம்.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். எட்டாமிடம் வலுப் பெறுவதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். இரண்டுக்குடையவன் வலுத்து தனயோகம் ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பிற்பகுதியில் சுகம் காணும் மாதம் இது. முதல் இரண்டு வாரங்கள் நிதானமாக இருங்கள்.

1,2,7,8,9,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம்தேதி அதிகாலை 3.40 மணி முதல் 24-ம்தேதி மதியம் 3.42 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.  

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.