குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (15.04.19 முதல் 21.04.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

தொழில் ஸ்தானாதிபதி சனி ஒன்பதாம் வீட்டில் குருவுடன் இணைந்து வலுவுடன் இருப்பதும், தனம், வாக்கு ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சநிலையில் இருப்பதும் மேஷ ராசிக்கு நன்மை தரக் கூடிய அமைப்புகள் என்பதால் உங்களுடைய அனைத்துக் காரியங்களும் வெற்றி பெறும் வாரம் இது. இளைஞர்களுக்கு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. உங்களுடைய பாக்யாதிபதி குருவும், காதல் கிரகமான சுக்கிரனும் ஆட்சி வலுவில் இருப்பதால் சிலருக்கு காதல் வரும். சிலர் எதிர்கால துணைவரை சந்திப்பீர்கள்.

தொழில், வேலை அமைப்புகளில் இருந்த தடைகள் விலகி  நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் இப்போது உண்டு.. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதிகள் நடக்கும். சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். வேறு சில மங்கள நிகழ்ச்சிகளும் நடக்கும். இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவாக மாறுவார்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையில் இருப்பது ரிஷபத்திற்கு நன்மை தரும் அமைப்பு என்பதால் இது உங்களுக்கு யோக வாரமே. உடல் நலமில்லாமல்  இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் இனி கண்டிப்பாகத் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

இளைய பருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும்.  கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ஏழாமிடத்தில் குரு அமர்ந்து ராசியை பார்த்து வலிமைப் படுத்தும் நிலையோடு இந்த வாரம் முதல் ஐந்துக்குடைய யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெறுவதும் மிதுனத்திற்கு திருப்பங்களைத் தரும் நல்ல அமைப்பு. உங்களில் சிலர் இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலையும் தீர்வும் கிடைக்கும் வாரம் இது. ஒரு சிறப்பு பலனாக மிதுனத்தினரை தொல்லைப் படுத்திக் கொண்டிருந்த போட்டி, பொறாமைகள் இப்போது விலகும். இந்த வாரம் முதல் வருமானம் அதிகமாகி சேமிப்புகள் செய்ய முடியும்.

சூரியன், சுக்கிரன் இருவரும் உச்சமாகி, ராசியும் ஜீவனாதிபதி குருவின் பார்வையில் இருப்பது உங்கள் தொழில் அமைப்புகளை  பாதுகாக்கும் அமைப்பு என்பதால், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மிதுனத்தினருக்கு இதுவரை உங்களுக்கு இருந்துவந்த தடங்கல்களும் முன்னேற்றமற்ற நிலைகளும் மாறும். பணியிடங்களில் இனிமேல் சாதகமான மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதி. மிதுனத்தினர் அனைவரும் இனிமேல் தொழில் விஷயங்களில் சந்தோஷமாக இருப்பீர்கள்.

கடகம்:

ஒன்பதுக்குடைய குருவும், லாபாதிபதி சுக்கிரனும், இரண்டிற்குடைய சூரியனும் ஆட்சி, உச்சம் போன்ற வலுவான நிலைகளில் இருப்பதால் அதிர்ஷ்டமும், தொழிலும் உங்களுக்கு கை கொடுக்கும் வாரம் இது. அதே நேரத்தில் பேச்சைக் குறிக்கும் வாக்குஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் மற்றும் யாரையாவது கடும் சொற்களால் திட்டி விடுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம். அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுங்கள். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. அவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள். சூரிய வலுவால் அனைத்தையும் சமாளித்து வெற்றி வீரனாக வலம் வருவீர்கள்.

சிம்மம்:

இந்த வாரம் முதல் ராசிநாதன் சூரியன் உச்சமாகி ஐந்தில் இருக்கும் குருவின் பார்வையில் இருப்பதும், அதே குரு ராசியைப் பார்ப்பதும் சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் உங்களுக்கு நன்மை தரும் வாரம் இது. குறிப்பிட்ட பலனாக எட்டில் உச்சமாக இருக்கும் சுக்கிரனால் சிலருக்கு குறுக்குவழியில் பணவரவு இருக்கும். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். எல்லாத் தரப்பு சிம்மத்திற்கும் மேன்மை தரும் வாரம் இது.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும். வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள்  போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வேலை செய்யுமிடங்களில்  நல்ல பலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். சிம்மம் சிறப்பாகும் வாரம் இது.

கன்னி:

இதுவரை செய்யாமலும், சொல்லாமலும் யோசிக்க மட்டுமே செய்து கொண்டிருந்த விஷயங்களில் தயக்கங்கள் விலகி இந்த வாரம் பளிச்சென்று தெளிவான முடிவுகளை கன்னியினர் எடுப்பீர்கள். அதுபோலவே எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள். பனிரெண்டிற்குடைய சூரியன் எட்டாம் வீட்டில் உச்ச நிலையில் இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். உங்களில் சிலருக்கு கண்களில் பிரச்னை வரும். கவனம் தேவை.

இரண்டை சூரியன் பார்ப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைத் திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணி வகுத்து வரும். 

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சவலு அடைந்திருப்பதும், லாபாதிபதி சூரியன்  ராசியைப் பார்ப்பதும் துலாம் ராசிக்கு நன்மைகளையும் லாபங்களையும் தரும் வாரம் இது என்பதைக் காட்டுகிறது. அதேநேரத்தில் ராசிநாதன் ஆறில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்புகள் இருக்கும். எதுவும் சீக்கிரம் நடக்காது. துலாத்தினருக்கு ஒரு சிறப்புபலனாக வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. பண விஷயத்தில் கறாராக உஷாராக இருங்கள்.

துலாத்தினருக்கு இந்த வாரம் காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியம் எண்ணம் போல் நிறைவேறும். உடல்நலம், மனநலம் சிறப்பாக இருக்கும். தெய்வ அருள் உண்டு. பிள்ளைகளால் பெருமை வரும்.

விருச்சிகம்

அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். விருச்சிகத்தினர் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் அதைச் செய்வீர்கள். எதிலும் துணிவோடு சாதிக்கும் தைரியத்தைக் கொடுப்பவரான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். யாராலும் உங்களை ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. உங்களில் சிலருக்கு எதிர்கால ஏற்றங்களுக்கான  மாற்றங்களைத் தரும் வாரம் இது.

தனஸ்தானமான இரண்டாமிடத்தில் குரு,சனி,கேது இணைந்திருப்பதால் வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் சிலருக்கு கடன் தவணை கட்டமுடியாத நிலைமை அமைந்து அதன் மூலமான மனக்கஷ்டங்கள் இருக்கும். சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். வியாபாரம் கண்டிப்பாக குறையாது. ஆனால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் நன்றாகவே இருக்கும்.

தனுசு:

உங்களில் சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் இந்த வாரம் நடக்கும். தள்ளிப்போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்கு இப்போது செல்வீர்கள். தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும்.

ராசியில் இருள் கிரகமான கேது இருப்பதால்  எந்த விஷயமும் நேரிடையாக முடிவு பெறாமல் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவதாகவே அமையும். உங்களின் பொறுமை சோதிக்கப்படும் என்பதால் அனைத்திலும் நிதானமும், கவனமும் தேவைப்படும் வாரம் இது. ஆறுக்குடைய சுக்கிரன் நான்காமிடத்தில் உச்சவலுப் பெறுவதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையும், சிலருக்கு வீண் விரையங்களும் இருக்கும். தனுசுவினர் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.

மகரம்:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக அமைவதால் இந்த வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் உங்களின் மனம் ஒரு நிலையில் இல்லாத நாட்களாக இருக்கும். சந்திரனுக்கு வீடு கொடுத்த அஷ்டமாதிபதி சூரியன் உச்சமாக இருப்பதால் இந்த நாட்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். இதுபோன்ற நிலைமை இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்பதால் வாரத்தின் பிற்பகுதியில் மகரத்தினர் நன்மை காணும் வாரம் இது.

இந்த வாரம் பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் வாக்குக் கொடுப்பதும் வேண்டாம். 18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி அதிகாலை 5.50 முதல் 17-ம்தேதி காலை 7.20 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருக்கும் வலுவான வாரம் இது. வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக அமைந்தாலும் உங்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏதும் இல்லை. இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்த இளைஞர்கள் இனிமேல் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். உங்களில் சிலருக்கு இந்த மாத இறுதியில் வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும்.

எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் முதலில் தடைகள் வந்து பிற்பகுதியில் உங்களுக்கு சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும். கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் இளையவர்களுக்கு இனிமேல் எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. 16,17 ஆகிய நாட்களில் தனலாபம் உண்டு. 17-ம்தேதி காலை 7.20 முதல் 19-ம்தேதி காலை 8.25 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

முழுமுதல் கடவுளான விநாயகப்பெருமானின் பூரண அருளுடன் பிறந்த மீன ராசியினர் சோதனைகளை வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர்கள் என்பது நிச்சயம். தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் மீனத்திற்கு முழுமையாகக் கிடைத்துக் கொண்டிருப்பதால் நீங்கள் எடுத்த காரியம் இப்போது வெற்றி பெறும். உங்களில் சிலருக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கின்ற சில சாதகமற்ற பலன்கள் இந்த வாரம் விலகும் என்பதால் நம்பிக்கையை கை விடாதீர்கள். மீனத்தினர் எதற்கும் கவலைப்பட தேவையில்லாத வாரம் இது.

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். 19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி காலை 8.25 முதல் 21-ம் தேதி காலை 11.10 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின்னால் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் கவனமுடன் இருங்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Be the first to comment

Leave a Reply