குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (08.04.19 முதல் 14.04.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பது மேஷ ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் சாதகமற்ற பலன்கள் எதுவும் இல்லாத வாரம் இது. குறிப்பாக அறிவை மூலதனமாக கொண்ட தொழில் மற்றும் வேலை அமைப்புகளில் இருப்பவர்களுக்கு இது சாதிக்கின்ற வாரமாகவும் இருக்கும். உங்களில் சிலருக்கு திருமணம் உறுதியாகின்ற நிகழ்ச்சிகளும் உண்டு. மேஷத்தினருக்கு இப்போது கவலைகள் எதுவும் இல்லாத பிரச்சினைகள் அற்ற வாழ்க்கை அமையும் என்பது உறுதி.

மூன்றாமிடத்தில் சுபத்துவ ராகு இருப்பதால் கேட்காமலேயே உதவிகள் உங்களைத் தேடிவரும். நீங்களும் முடிந்த அளவு அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். ஊடகம் மற்றும் எழுத்துத் துறையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள்.  வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு பணவரவுகளில் இருந்த தேக்கநிலையும் குழப்பங்களும் மாறும்.  தாராள பணவரவு இந்தவாரம் உண்டு. உங்களில் சிலருக்கு தந்தையின் ஆதரவு இல்லாத நிலைமையும் சீர்படும்.

ரிஷபம்:

ரிஷபத்தினருக்கு மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும் வாரம் இது. சிலருக்கு இப்போது ஞானிகள் தரிசனம் அல்லது இதுவரை போக முடியாமல் இருந்த திருக்கோவில் தரிசனம் கிடைக்கும். என்னதான் நல்லபலன்கள் நடந்தாலும் எட்டில் இருக்கும் கேது, சனியின் பாபத்துவ ஆதிக்கத்தினால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போன்ற நிலை இருக்கும். சனியே உங்களுக்கு யோகாதிபதி என்பதால் கவலைப்படும் அளவிற்கு எந்த சோதனையும் வந்து விடப் போவது இல்லை.

பணிபுரியும் இடங்களில் உண்டான சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் அலுவலகங்களில் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். நீண்டநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த விஷயங்கள் இப்பொழுது வெற்றியடையும். வராது என்று கைவிட்ட பணம் வரும். பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சிறப்படைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் மேஷராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

மிதுனம்:

மிதுனத்திற்கு தற்போது இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கின்ற கிரக அமைப்பு இருப்பதால் இது நல்ல வாரம்தான் உங்களில் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு இதுவரை இருந்து வந்த விரையங்கள் தவிர்க்கப்பட்டு இனிமேல் வருமானத்தை சேமிக்க முடியும். இனிமேல் உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு பரம்பொருளின் தயவால் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய சோதனைகள் எதுவும் இந்த வாரம் இல்லை. வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் சாதகமாக மாறும். பணிபுரியும் இடங்களில் பிரச்னைகளை சந்தித்தவர்கள் தற்பொழுது அது நீங்குவதற்கான ஆரம்பங்கள் நடப்பதை உணர ஆரம்பிப்பீர்கள்.  குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேற்றுமைகளையும் முணுமுணுப்புகளையும் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். நல்லவர் போல் நடித்து குடும்பத்தில் நாரதர் வேலை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள்.

கடகம்:

வார முடிவில் ராசிநாதன் சந்திரன் ராசியில் இருக்கும் நிலையில் இருப்பதோடு ராசிக்கு ஆறாமிடத்தில் யோகத்தை தரும் நிலையில் சனி, கேது இருப்பது கடக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கப் போகிறது என்பதை காட்டுகின்ற கிரக நிலைகள் என்பதால் கடகத்திற்கு நல்லதொரு எதிர்காலம் ஆரம்பமாகின்ற துவக்க வாரமாக இது இருக்கும். உங்களில் சிலருக்கு இந்த வாரம் பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் திடீர் தனவரவு உண்டு. கிடைத்த பணத்தை மீண்டும் முதலீடு செய்ய வேண்டாம்.

சிலருக்கு தடைப்பட்டிருந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் செயல்படத் துவங்கும். கூட்டுத்தொழிலில் கருத்து வேற்றுமைகள் நீங்கும். அவசரத்திற்கு நண்பர்கள் உதவுவார்கள். மனைவி வழியில் உதவிகள் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து  ஆதரவு கிடைக்கும். என்னதான் அடுத்தவர் உதவினாலும் நம்முடைய கை உழைத்தால்தான் நமக்கு நிம்மதி என்று நினைக்கக் கூடிய உங்களுக்கு இது திருப்பம் தரும் வாரம்தான். இதுவரை உடல்நலம், மனநலம் கெட்டிருந்தவர்கள் உடனடியாக அனைத்தும் சீர்பெற்று நல்லநிலைக்கு வருவீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் எட்டில் மறைந்தாலும், அவர் நண்பரான குருவின் வீட்டில் இருப்பதால், சிம்மத்திற்கு நன்மைகள் மட்டுமே நடக்கின்ற வாரம் இது. சிம்ம ராசி இளைஞர்களில் சிலருக்கு மதிப்பு மரியாதை உயரும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். வயதானவர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு.. அவர்களால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் நடக்கும். புத்திரர்கள் மூலம் பணவரவு வந்து  வீடோ மனையோ வாங்கும் அமைப்பு உள்ளது. இளையவர்கள் சாதிக்கும் வாரம் இது. 

சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு பயணம் செய்வீர்கள். அது ஆன்மிகப் பயணமாக இருக்கலாம். வெளிநாட்டு கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இட மாறுதல் இருக்கும். செலவுகளில் சிக்கனமாக இருங்கள். அதிக வருமானம் வரும் நேரம் என்பதால் அனைத்தையும் செலவு செய்துவிடாமல் ஓரளவாவது சேமிப்பது நல்லது. அப்பா விஷயத்தில் நன்மைகளோ, தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக சம்மதிக்காத ஒரு விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன் இருக்கும்.

கன்னி:

ராசிநாதன் ஆறாமிடத்தில் இருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காத வாரம் இது. சில கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படுகின்ற அளவுக்கு மீறிய செலவால் கொஞ்சம் திகைத்துத்தான் போவீர்கள். என்னதான் இருந்தாலும் யோகாதிபதி சுக்கிரன்  நல்ல நிலையில் இருப்பதால் சங்கடங்கள் அனைத்தையும் சாதகமாக மாற்றிக் கொண்டு சாதித்தே தீருவது என்று கங்கணம் கட்டி வேலை செய்வீர்கள். நட்புக் கிரகங்கள் வலுத்திருப்பதால் எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவுகள் கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை வெளிப்படும் வாரம் இது.

இந்த விஷயம் நடக்கவே நடக்காது, இதை முடிக்கவே முடியாது என்று நினைத்திருந்த சில விஷயங்கள், மற்றும் சில காரியங்கள் தற்போது பரம்பொருளில் அருளினால் அதிகமான முயற்சி இன்றியே நல்லவிதமாக முடிவதை பார்க்க முடியும். கடன் தொல்லைகள் எல்லை மீறாது. அதே நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் இழுத்தடித்துத்தான் வரும். தந்தையுடன் பிறந்தவர்களுடன் ஏதேனும் சச்சரவு வரலாம் என்பதால் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிலும் நிதானம் தேவை.

துலாம்:

துலாத்தினர் அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஆனந்தம் பெறுகின்ற வாரம் இது. சனி, கேது, குரு மூவரும் மூன்றாமிடத்தில் இணைந்து சகாய ஸ்தானம் வலுப் பெறுவதால் அருகில் இருக்கும் நபர்கள் மூலம் இப்போது ஆதாயங்களும், நன்மையான போக்கும் உண்டு. கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்திருந்த வேலை பற்றிய நல்ல தகவல்களும், தகப்பனார் வழி நன்மைகள் கிடைக்கின்ற வாரமாகவும் இது இருக்கும். சிலர் பெண்களால் ஆதாயம் அடைவீர்கள்.

பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் லாபமும் வரக் கூடிய யோக வாரம் இது. உடல் நலமில்லாமல்  இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை, கௌரவம்  அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது.

விருச்சிகம்:

வார ஆரம்பமே விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டம நிலையில் ஆரம்பித்தாலும் சந்திரனைக் குரு பார்க்கும்போது சந்திராஷ்டம நாட்கள் தீமைகளை செய்யாது என்கின்ற விதிப்படி இது விருச்சிகத்திற்கு நல்லபலன்கள் நடக்கின்ற வாரமாக இருக்கும். எட்டில் மறைவது உங்களது பாக்யாதிபதி என்பதாலும், அவர் தனாதிபதி பார்வையில் இருப்பார் என்பதாலும் இந்தவாரம் உங்களுக்கு மறைமுக தனலாபமும், செய்ய முடியாது என்று இதுவரை நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த காரியங்களை நிறைவேற்றிக் காட்டுதலும் நடக்கும்.

வார இறுதியில் பெண்களால் சாதகமான பலன்கள் உண்டு. சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சிலருக்கு தூரப் பிரயாணங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டு. சில வாரங்களாக இருந்து வந்த ராசிநாதனின்  வலுக்குறைவு இப்போது நீங்குவதால் இனிமேல் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றிமேல் வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் இனி என்றும் உங்களுக்கு சந்தோசம்தான்.

தனுசு:

ராசிநாதன் குரு ராசியில் பலமாக இருப்பதால் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெல்வதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுவீர்கள். போராட்ட குணமுடைய தனுசு ராசிக்காரர்களை வீழ்த்த முடியாது என்பதை பிறருக்கு உணர்த்துவீர்கள். தொழில் அமைப்புகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் இந்த வாரம் நல்ல பலன்கள் தரும். நீண்டகால பகை ஒன்று தீர்ந்து சமரசம் ஆவீர்கள். பணத்திற்காக பொய் பேச நேரும். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். 

ஏழரைச்சனி இளம்வயதில் வருவது கெடுபலன்களைத் தருவதாகத் தெரிந்தாலும், சனி இந்தக் காலகட்டத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதையும் நல்லவர் யார்? நம்மை விரும்பாதவர் யார்? வேண்டியவர் யார் என்பதையும் தெளிவாக்குவார். மேலும் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் சொல்லிக் கொடுத்து பணத்தின் அருமையை தெரிய வைப்பார். தற்போது சனியினால் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சனி முடிந்த பிறகு மேற்கண்ட அனுபவங்களினால் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

மகரம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சனி சுப கிரகமான குருவுடன் இணைந்து பலம் மிகுந்த அமைப்பில் இருப்பதால் மகரத்தினர்  எதிலும் வெற்றி பெறுகின்ற வாரம் இது. ராசிநாதன் வலுப் பெறுவதால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பழுதின்றி நிறைவேறும் என்பது ஜோதிடத்தின் கணக்கு. எனவே மகரத்தினர் தயக்கங்களை உதறித் தள்ளி துணிச்சலுடன் இறங்க வேண்டிய வாரம் இது. வாரம் பிறக்கும்போதே நல்ல அமைப்பு உள்ளதால் துன்பங்கள் அனைத்தையும் நீங்கள் தூசாக்கி காட்டுகின்ற வாரமாகவே இது இருக்கும்.

ராசிநாதனோடு குரு வலிமை பெற்று தொடர்பு கொள்ளுவதால் புத்துணர்ச்சியுடன் எதையும் செயல்படுத்திக் காட்டுவீர்கள். இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம்.  எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள்.  இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும்.

கும்பம்:

கும்பராசி இளையபருவத்தினர் சிலர் இதுவரை நடைபெற்று வரும் எதிர்மறை பலன்களால் தன்னம்பிக்கையின்றி இருப்பீர்கள். உங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல நல்ல நிகழ்ச்சிகள் இந்தவாரம் உண்டு. அலுவலகங்களில் நிம்மதியான சூழல் இருக்கும் என்றாலும் எந்தப்புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்று நினைத்து தேவையில்லாமல் பயந்து கொண்டிருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றைக்குமே மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து கொண்டீர்களேயானால் பயம் தேவையே இல்லை.

கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் மாறும். பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். ராசிநாதன்  வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். எதிர்பார்க்காத பணவரவும் இந்தவாரம் உண்டு.

மீனம்:

ராசிநாதன் வலுவாக இருப்பதாலும், மூன்றாமிடம் சுபத்துவமாக இருப்பதாலும் அனைத்து விஷயங்களிலும் தெளிவான மனதுடன் நீங்கள் முடிவெடுக்கும் வாரம் இது. சிலருக்கு மட்டும் பெண்கள் விஷயத்தில் நல்லதும் கெடுதலுமான இரட்டை பலன்கள் இருக்கும். கொடுத்துக் கெடுக்கும் சில சம்பவங்கள் இந்த வாரம் உண்டு. அக்கா, தங்கை, அம்மா, மகள் போன்ற பெண்உறவுகள் விஷயத்தில் செலவுகளும், வீண் மனஸ்தாபங்களும் இருக்கும். பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். வேலையில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரும்.

கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் மாறும். நண்பர்களால் லாபம் இருக்கும். மூத்தவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். எதிர்பார்க்காத பணவரவும் இந்தவாரம் உண்டு.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Be the first to comment

Leave a Reply