குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (25.03.19 முதல் 30.03.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

இந்த வாரம் நடக்க இருக்கும் அதிசார குருப்பெயர்ச்சியால் நன்மைகளை அடையும் ராசிகளில் மேஷமும் ஒன்று. மேஷத்திற்கு இன்னும் சில வாரங்கள் யோக வாரங்களாக இருக்கும். இந்த அமைப்பால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சுக்கிர நிலையால் சிலருக்கு பெண்களால் செலவுகளும் இருக்கும். அலுவலகங்களில் எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணமடைவார்கள்.

ஆறாமதிபதி புதன்  பதினொன்றில் வலுப்பெறுவதால் காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமான முடிவிற்கு வரும். கோர்ட் விவகாரங்கள் மூலம் நிம்மதி கிடைக்கும். 25-ம்தேதி அதிகாலை 1.08 முதல் 27-ம்தேதி காலை 8.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் நட்பு வலுவில் இருப்பதால், நண்பரான புதனுடன் இருப்பதால்  ரிஷபத்தினருக்கு  நல்லவைகளுக்கான மாற்றங்கள் உண்டாகும் வாரம் இது. சிலருக்கு இப்போது வேலை செய்யும் இடங்களில் நெருக்கடிகள் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். வேலை தருபவரிடமோ, முதலாளியிடமோ கருத்து  வேறுபாடுகள் தோன்றி வேலையை விட்டுவிடக்கூடிய சூழல் உருவாகும். எதிலும் அவரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

இந்த வாரம் நடக்க இருக்கும் குருவின் அதிசாரப் பெயர்ச்சியால் எட்டாமிடத்தில் குரு, சனி, கேது மூவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த கிரகநிலையால் பணியிடங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 27-ம்தேதி காலை 8.19 மணி முதல் 29-ம் தேதி இரவு 7.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்கள், புதிய முயற்சிகளை இந்த நாட்களில் தள்ளி வைப்பது நல்லது.

மிதுனம்:

ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் இணைந்து நல்ல நிலையில்   இருப்பதால் மிதுன ராசிக்காரர்களின் அனைத்து விஷயங்களிலும் அவரவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லதாக நடக்கும் வாரம் இது. அதேநேரத்தில் ராசியை சனி பார்ப்பதால் எதிலும் குழப்பங்கள் உள்ள வாரமாகவும் இது இருக்கும். இந்த வாரம் நடக்கும் குருவின் அதிசார பெயர்ச்சியால் உங்களில் சிலர் செய்ய கடினமான வேலைகளை எடுத்துச் செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். இளையபருவத்தினருக்கு வேலை விஷயமான பயணங்கள் இருக்கும்.

சிலருக்கு எப்படி இந்த பணம் வந்தது என்று சொல்ல முடியாத முறைகேடான வழிகளில் பணம் வரும். ஆனால் அதை சேமிக்க முடியாது. வருமானத்தை மனைவியின் கையில் கொடுத்து பத்திரப் படுத்தினால் மட்டுமே செலவிலிருந்து தப்பிக்க முடியும். 27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 29-ம் தேதி இரவு 7.23 மணி முதல் 1-ம்தேதி காலை 8.21 மணி வரையும்  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

கடகம்:

கடகத்திற்கு மேன்மைகளைத் தரும் வாரம் இது. இந்த வாரம் நடக்கும் அதிசார குருப்பெயர்ச்சியால் ராகு குருவின் பார்வையில் வருவது உங்களுக்கு நன்மைகளைச் செய்யும். ராகு வலுவாக இருப்பதால் ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இது நல்ல வாரம். தனாதிபதி சூரியன் வலுப்பெறுவதால் பணவரவு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். அதேநேரத்தில் சேமிக்க முடியாத அளவுக்கு விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும்.

இதுவரை உயர்கல்வி கற்பதற்கு தடைகள் நீங்கும். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். உங்களில் சிலர் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். திரவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள், துறைமுகம் சம்பந்தபட்டவர்களுக்கு பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பங்கள் இருக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் தொல்லைகள் வரும். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக போக்கு காட்டிக் கொண்டிருந்த வாய்ப்பு வீடு தேடி வந்து கிடைக்கும்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் எட்டில் இருப்பதாலும், செவ்வாயின் பார்வை ராசியில் விழுவதாலும் டென்ஷனாக இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். தாயார் வழியில் செலவுகளும், விரயங்களும் ஏற்படும். வேலையிடங்களில் சிரித்துப் பேசி கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

தனஸ்தானம் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் சமாளிப்பீர்கள். பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் இந்த வாரத்தின்  தடைகளையும் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில்வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,

கன்னி:

கன்னிக்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. ஆயினும் ராசிநாதன் புதன் ஆறில் இருப்பதால் எதிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும். கைப்பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. செல்போனை மறதியாக எங்காவது விட்டுவிட்டு தேடிக்கொண்டிருப்பீர்கள். வேலைக்காரர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பணம் கொடுத்து விடுவதில் யாரையும் நம்ப வேண்டாம்.

ராசிநாதன் புதன் சுக்கிரனுடன் சனியின் வீட்டில் இருப்பதால் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வாரம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். மற்றபடி வாரம் முழுவதும் சந்திரன் நல்ல நிலைமைகளில் இருப்பதாலும், யோகாதிபதிகள் நன்மை தரும் அமைப்பில் உள்ளதாலும் இது நல்ல வாரம்தான்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன், யோகாதிபதி புதன் இருவரும் நல்ல அமைப்பில் உள்ளதால் துலாம் ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவைகள் நடக்கும் வாரம் இது. இதுவரை தன்னம்பிக்கை இன்றி இருந்து வந்த சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். கல்லூரி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் விஷயத்தில் ஏதேனும் குழப்பங்கள் வரலாம். உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் கடுமையாக உழைத்தால் இந்த வாரம் எதிர்பார்ப்பதை விட நல்ல வெற்றி கிடைக்கும்.

நடுத்தர வயதினருக்கு தொழில் சிக்கல்கள் தீரும். சிலர் பழைய வாகனங்களை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். சிலருக்கு ஏதேனும் ஒரு நல்ல பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். கிரகங்கள் யோக நிலையில் இருப்பதால் இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணை விஷயத்தில் செலவுகள் செய்யும் வாரம் இது. துணைவரால் சந்தோஷமும், குடும்பத்தில் உற்சாகமும் இருக்கும்.  இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பிடிப்பு வரும். எதற்கும் கவலைப்பட வேண்டாம். விருச்சிகத்திற்கு நல்லகாலம் ஏற்கனவே பிறந்து விட்டது. மகன், மகள் விஷயங்களில் நல்ல தகவல்கள் இருக்கும். கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனி வழக்குகள் சாதகமாகத் திரும்பும்.

இந்த வாரம் நடக்கும் அதிசார குருப்பெயர்ச்சி விருச்சிகத்திற்கு நல்ல நன்மைகளைத் தரும். இன்னும் சில வாரங்களுக்கு குரு இரண்டாமிடத்தில் இருப்பது உங்களுக்கு பணவரவைத் தரும் அமைப்பு. எதிலும் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய வாரம்  இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். விரயங்கள் தடுக்கப்பட்டு இனி நல்ல விஷயத்திற்காக மட்டுமே செலவு செய்வீர்கள்.

தனுசு:

சாதாரணமாக சிறிய விஷயம்தானே என்று அலட்சியப்படுத்தும் ஒரு விஷயம் பூதாகரமாக உருவெடுத்து தனுசு ராசி இளையவர்களுக்கு  தலைவலியை தரும் வாரம் இது. எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். ஒரு முக்கிய பலனாக வேலை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட்கும் ஏஜண்டுகளை நம்பி கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டாம். ஏமாறுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பத்து தடவை யோசித்து செய்யுங்கள்.

உயரமான இடங்களுக்கு செல்லும் போது கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி செயல்கள் கை கொடுக்காது. புதிதாக தொழில் எதுவும் இப்போது ஆரம்பிக்க வேண்டாம். இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் எதிலாவது சனி மாட்டி வைப்பார். எல்லா விஷயங்களும் இழுத்துக் கொண்டே போய் இறுதியில்தான் நன்றாக முடியும். பொறுமை தேவைப்படும் வாரம் இது.

மகரம்:

மகர ராசி இளைய பருவத்தினருக்கு காதல் வரும் வாரம் இது. தந்தைவழி உதவியை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், உங்களுக்கு கீழே இருப்பவர்களை நம்பாமல் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை நம்ப வேண்டாம். சிலருக்கு நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது போன்ற விஷயங்கள் நடக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மனதில் இருப்பதை எவரிடமும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்லுங்கள். சாதகமற்ற நேரத்தில் பணிவு காட்டுவதால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள். இருக்கும். ஆறாம் வீடு  வலுப்பெறுவதால் உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளும் சில விஷயங்களை இப்பொழுது செய்வீர்கள். தேவையில்லாமல் எதையாவது பேசி வேண்டப்பட்டவர்களை மனம் நோக அடிப்பீர்கள். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு அமைப்புகளால்  நன்மைகள் கிடைக்கும்.

கும்பம்:

யோகாதிபதி சுக்கிரனும், புதனும் ராசியில் இருப்பதால் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பணவரவுகளும், குழந்தைகளால் சந்தோஷமான செய்திகளும் கிடைக்கும் வாரம் இது. இந்த வாரம் நடக்க இருக்கும் அதிசாரப் பெயர்ச்சி மூலம் குருபகவான் லாபஸ்தானத்திற்கு வந்திருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு கும்பத்திற்கு நல்ல வருமானங்கள் உண்டு. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும்.

அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.   தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்

மீனம்:

மீன ராசிக்காரர்கள் நினைப்பதை நடத்தி காட்டி தங்களின் ஆளுமைத் திறனையும், அதிர்ஷ்டத்தையும் சுற்றி உள்ளவர்களுக்கு எடுத்து காட்டும் வாரம் இது. ஆறுக்குடைய சூரியன் ராசியில் இருப்பது சாதகமற்ற நிலை என்று தோன்றினாலும் ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.  வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது.

சிலருக்கு இடமாற்றங்கள் உண்டு திருக்கோயில்களைச் சுற்றித் தொழில் புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வாரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. மக்களைப் பற்றி மனக்கவலைகள் வரும் என்பதால் குழந்தைகளுடன் தகாதவர்கள் யாராவது பழகுகிறார்களா என்பதில் அக்கறை தேவை.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Be the first to comment

Leave a Reply