மகரம் – 2019 மார்ச் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

மகரம்:

யோகாதிபதி சுக்கிரன் ராசியில் இருப்பது மகரத்திற்கு பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் பணவரவு கிடைக்கும் மாதமாக இருக்கும். விரைய ஸ்தானத்தில் சனி இருப்பது தூர இடங்களில் உங்களை நஷ்டப்பட வைக்கும் ஒரு நிலை. வெளிநாடு வெளிமாநில விஷயங்களில் சாதகமற்றவைகள் இப்போது நடக்கும். குறிப்பாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி முன்கூட்டியே பணம் கேட்பவர்களை எக்காரணத்தை கொண்டும் நம்ப வேண்டாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டும்.

நட்புக் கிரகங்களான சனி, புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தொழில் இடங்களிலும், வீட்டிலும் உங்களை கோபப்படுத்தி எரிச்சல் ஊட்டும் சம்பவங்களை நடக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். எதையும் நீங்கள் சங்கடமாக எதிர்கொள்ளும் மாதம் இது. பிற்பகுதி மாதத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடுத்தவரின் உதவி இன்றி காரியங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம்.

பனிரெண்டாம் இடம் வலுப் பெறுவதால் வீண்செலவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவு செய்வதற்கு தேவையான பணவரவும் வருமானங்களும் கிடைக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம்தேதி இரவு 9.46 மணி முதல் 20-ம்தேதி இரவு 9.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

Be the first to comment

Leave a Reply