Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (21.2.2017)

ஆர். எஸ். நாதன், மதுரை.

 கே
ராசி
சனி
 குரு
ரா சந்
பு
 சூ
செவ்
சுக்
கேள்வி :

எனக்கும் என் மகனுக்கும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். கடந்த நான்கரை வருடங்களாக நாங்கள் மிகுந்த துன்பத்தினை அனுபவித்து வருகிறோம். எனது மகனுக்கு திருமணமாகிவிட்டது. காதல் திருமணத்தை அவன் மனம் கோணாதபடி நடத்தி வைத்தும் நான்கு மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது. அவருக்கு இரண்டாவது திருமணம் நடக்குமா? எப்போது நடக்கும்? வாழ்வில் தன் முயற்சியால் உயர்வாரா?

பதில்:

(மகர லக்னம், விருச்சிக ராசி. 1-ல் சனி. 6-ல் கேது. 8-ல் குரு. 9-ல் சுக். 10-ல் சூரி, செவ். 11-ல் புத. 9.11.1991, காலை 11.25, மதுரை)

லக்னத்திற்கு ஏழை சனி பார்த்து, ராசிக்கு ஏழை செவ்வாய் பார்த்து, லக்னம், ராசி இரண்டிற்கும் ஏழுக்குடையவன் நீசமாகி, சனி, செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ராசிக்கு இரண்டு, எட்டில் ராகு-கேதுக்கள் அமர்ந்த உங்கள் மகனுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைத்தது தவறு. அதிலும் அவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது கண்ணை திறந்து வைத்துக் கொண்டே கிணற்றில் விழுந்திருக்கிறீர்கள்.

ஏழுக்குடையவன் பலவீனமாகி பதினொன்றுக்குடையன் வலுவாகும் ஜாதகங்களுக்கு கவனமாக பொருத்தம் பார்க்கப்பட வேண்டும். உங்கள் மகன் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நீசமாகி பதினொன்றாம் அதிபதி ஆட்சிக்கு நிகரான திக்பலம் பெற்றதால் 2-வது திருமணம் நடக்கும். லக்னத்திற்கு இரண்டை குருவும் பார்ப்பதால் உறுதியாக நடக்கும்.

அதேநேரத்தில் ஐந்துக்குடைய சுக்கிரன் நீசமாகி, புத்திரகாரகன் குரு எட்டில் மறைந்தது புத்திரதோஷம் என்பதால் தாமதமாகத்தான் நடக்கும். தற்போது நடைபெறும் சுக்கிரதசையில், குருபுக்தி தம்பதிகளை பிரிக்கும் என்பதன்படி இருவருக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது. விருச்சிக ராசி இருக்கும் வீட்டில் வரும் தீபாவளிக்குப் பிறகுதான் நிம்மதி இருக்கும். லக்னாதிபதி ஆட்சியாக இருப்பதால் சனி முடிந்ததும் தன்முயற்சியில் பிழைத்துக் கொள்வார்.

பி. வி.பகலவன், மதுரை – 12.

சந்
பு
சூ
குரு
சுக்
 ரா ராசி  ல
செவ்  கே
 சனி
கேள்வி :

கிராமத்தில் எழுதப்பட்ட எனது மகனின் ஜாதகக் குறிப்பு சரியா? தவறா? திருமண தடங்கலுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் அமைப்பா? அல்லது எனது மகனின் சிறிய குறைபாட்டால் (போலியோ) ஏற்பட்ட பாதிப்பா?

பதில்:

(கடக லக்னம், மீன ராசி. 6-ல் சனி. 7-ல் செவ். 8-ல் ராகு. 9-ல் புத. 10-ல் சூரி, குரு. 11-ல் சுக். 15.4.1988, மதியம் 2 மணி, தேனி)

கிராமத்தில் எழுதப்பட்ட ஜாதகம் தவறான வாக்கியப் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே நட்சத்திர இறுதியில் பிறந்த உங்கள் மகனுக்கு ராசி மாறாமல் நட்சத்திரம் மட்டும் மாறும். உங்கள் மகன் உத்திராட்டாதி 4-ல் பிறந்திருக்கிறார். ரேவதி நட்சத்திரம் அல்ல. திருக்கணிதப்படி சரியான ஜாதகத்தை கணித்து வைத்துக் கொள்ளவும்.

ஜாதகப்படி ஏழில் உச்ச செவ்வாய் அமர்ந்து, ராசிக்கு ஏழை சனி பார்ப்பதும், லக்னத்திற்கு 2, 8-ல் ராகு-கேதுக்கள் அமர்ந்து, ஏழுக்குடையவன் ஆறில் மறைந்ததால்தான் திருமணம் தாமதமாகிறதே தவிர உங்கள் மகனின் குறைபாட்டால் அல்ல. இதுபோன்ற ஜாதகங்களுக்கு தாமதமாக திருமணம் ஆவது நல்லது. ஜாதகப்படி உங்கள் மகன் கோபக்காரனாகவும் இருப்பார். சுக்கிர தசை நடந்து கொண்டிருப்பதால் இனிமேல் திருமணம் தாமதம் ஆகாது. சுறுசுறுப்பாக பெண் பார்க்கவும்.

கே. முருகானந்தம், கோவை.

சூ
பு
குரு சுக்
 ரா ராசி
செவ்
 கே
 சனி  சந்
கேள்வி :

ஜோதிடத்தின் ஜோதிக்கு வணக்கம். சென்ற வருடம் எனது சொந்த அத்தை மகளுடன் எனக்கு திருமணம் நடந்தது. 2 மாதம்தான் சேர்ந்து வாழ்ந்தோம். பிறகு என்னை பிடிக்கவில்லை என்றும், என் ஆண்மையை பற்றியும், என் பெற்றோரையும் கேவலமாக பேசி உற்றார் உறவினர் அனைவர்கள் முன் என் குடும்பத்தை மிகவும் கேவலப்படுத்தி சென்று விட்டாள். நீதிமன்றத்தில் தற்போது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. எனக்கு மருத்துவ ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா? அடுத்து திருமணம் எப்போது நடக்கும்? சொந்தமா? அந்நியமா? குருபார்த்தால் கோடி நன்மை என்பார். குருஜி அவர்கள் என் ஜாதகத்தை பார்த்தால் என் வாழ்க்கை புனிதமாகும் என்ற நம்பிக்கையுடன் பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

(மகர லக்னம், துலாம் ராசி. 1-ல் செவ். 2-ல் ராகு. 3-ல் சூரி, புத. 4-ல் குரு. 5-ல் சுக். 12-ல் சனி. 5.4.1988, அதிகாலை 2.25, பள்ளப்பட்டி)

இன்றைய சமூகத்தில் விவாகரத்துக்கள் சகஜமாகி வருவதால் பொருத்தம் பார்க்க வரும்போதே, முதல் திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் அதிபதியை விட இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றுக்குடையவன் வலுவாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் சரியான ஜாதகத்தைப் பொறுத்த வேண்டும்.

உங்கள் ஜாதகப்படி ஏழாமிடத்தை உச்ச செவ்வாய் பார்த்து ஏழுக்குடையவன் திக்பலம் இழந்த நிலையில் பதினோராம் அதிபதி உச்சமாகி இருக்கிறார். இந்த அமைப்பு தெள்ளத் தெளிவாக இரண்டு திருமணத்தைக் குறிக்கிறது. திருமண பாவத்தை சுபர் பார்த்திருந்தால் மட்டுமே இந்த பலன் மாறும். ராசிக்கு ஏழில் ஆறுக்குடையவன் அமர்ந்ததும் குற்றம். இங்கே குரு அமர்ந்தார் என்பதெல்லாம் செல்லுபடி ஆகாது.

அடுத்து நடக்க இருக்கும் சனிதசை ராகு புக்தியில், குடும்ப பாவமான இரண்டாமிடத்தில் ராகு இருப்பதால், குடும்பஸ்தானாகி 2021 ல் முதலில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தை ஆவீர்கள். ஏழாமிடம் பாபர் சம்பந்தம் பெற்ற நிலையில் அத்தை பெண்ணை மணந்தது தவறு. இரண்டாவது அன்னியப் பெண் அமையும்.

எம். சங்கரநாராயணன், பாண்டிச்சேரி.

ரா குரு
ராசி
சந்
சனி
சூ,பு
சுக்
செவ்
கே,ல
கேள்வி :

மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. எங்கு சென்றாலும் பெண் வீட்டில் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சொல்கிறார்கள். திருமணத்திற்கு கடுமையான தடையாக இருக்கிறது. எப்போது நீங்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பதில்:

(கன்னி லக்னம், விருச்சிக ராசி. 1-ல் செவ், கேது. 2-ல் சூரி, புத, சுக். 3-ல் சனி. 7-ல் ராகு. 8-ல் குரு 25.10.1987, அதிகாலை 4.52, ராஜபாளையம்).

மகனுக்கு ஏழுக்குடையவன் எட்டில் மறைந்து, களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, ராசிக்கு ஏழை சனியும், லக்னத்திற்கு ஏழை செவ்வாயும் பார்த்து, குடும்ப பாவத்தில் நீசன் அமர்ந்து கடுமையான தார தோஷம் உண்டான ஜாதகம். இது போன்ற ஜாதகங்களுக்கு சீக்கிரம் திருமணமானால் சிக்கல்கள் வரும்.

இரண்டாம் திருமணத்தைக் குறிக்கும் சந்திரன் நீசமாகி சனியுடன் இணைந்து பலவீனமானமானது ஒரே திருமணத்தைக் குறிப்பதாலும், விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி நடந்து வருவதாலும் திருமணம் தாமதமாகிறது. இல்லையென்றால் முன்னரே கல்யாணம் ஆகி கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பார்.

ராகு ஏழில் இருப்பதால் ஸ்ரீகாளஹஸ்தி சென்று சர்ப்பசாந்தி பூஜைகளைச் செய்யுங்கள். அவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கிச் செய்வது சிறப்பு. லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்யவேண்டும்.

செ. மல்லேஸ்வரி, பவானி – 2.

குரு
ரா
செவ்
சூ
பு
ராசி  ல
சந்
சுக்
சனி கே
கேள்வி :

பல வருடங்களாக மகளுக்கு வரன் பார்த்து வருகிறோம். இன்னும் அமையவில்லை. ஜோதிடர்கள் சொன்னபடி பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்தும் பயன் இல்லை. வருடங்கள் கடந்து கொண்டே வருகிறது. மகளின் வயதும் என் கவலை போல கூடிக்கொண்டே போகிறது. குருஜி அவர்கள் இந்த ஜாதகத்தை கணித்து எப்போது திருமணம் ஆகும் என்று கூறும்படி வேண்டுகிறோம்.

பதில்: 

(கடக லக்னம், மகர ராசி. 5-ல் சனி. 7-ல் சுக். 8-ல் சூரி, புத. 9-ல் குரு, ராகு. 10-ல் செவ். 26.2.1987, மதியம் 3.37, காங்கேயம்.)

மகளுக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி அமர்ந்து ராசிக்கு ஐந்தாமிடத்தைப் பார்த்ததும், புத்திர காரகன் குரு ராகுவுடன் இணைந்து, புத்திர   ஸ்தானாதிபதி செவ்வாய் அந்த பாவத்திற்கு ஆறில் மறைந்ததும் தாமத புத்திர பாக்கிய அமைப்பு.

ஆனாலும் லக்னாதிபதி சந்திரன் சுக்கிரனோடு இணைந்து லக்னத்தைப் பார்த்து   குருவும் லக்னத்தைப் பார்ப்பது நல்ல யோக அமைப்பு. திருமணத்திற்கு பிறகு சிறப்பான வாழ்க்கை அமையும். தற்போது குருதசை சனிபுக்தி நடப்பதால் இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்து விடும். தசாநாதனுடன் ராகு இணைந்து பாக்கியத்தைத் தடுப்பதால் ராகுவிற்கான ப்ரீத்திகளைச் செய்யுங்கள்.

. பிரித்திவிராஜ், சென்னை.

சந்
கே
ராசி  சூ
குரு
சனி  பு,சுக்
செவ்
 ரா
கேள்வி :

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் ஸ்டோர் கீப்பர் வேலைக்காக விண்ணப்பித்து இருக்கிறேன் . எனது கனவும், லட்சியம் அதுதான். எனக்கு அந்த வேலை கிடைக்குமா? ஏதாவது தடை இருக்குமா? பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில்:

{கன்னி லக்னம் மிதுன ராசி 7.8.1991, காலை 9.10, சென்னை.)

வெளிநாடு, வெளிமாநிலத்தைக் குறிக்கும் எட்டு பனிரெண்டிற்குடையவர்கள் வலுத்திருப்பதாலும், அதாவது எட்டிற்குடையவன் பனிரெண்டில் சுபர்களுடன் இணைந்திருப்பதாலும், லக்னாதிபதியே தூர தேசங்களைக் குறிக்கும் பனிரெண்டில் அமர்ந்து, ஜீவனஸ்தானத்தில் சந்திரன் இருப்பதாலும் உங்களுக்கு வெளிமாநிலத்தில் அரசுப்பணி கிடைக்கும்.

தற்போதைய தசாநாதன் குரு சர ராசியான கடகத்தில் அமர்ந்து, அடுத்து நடக்க   இருக்கும் தசையின் நாயகனான சனியும் சரராசியில் அமர்ந்திருப்பதும் இதை உறுதி செய்கிறது. பரிகாரங்கள் தேவையில்லை.

பாதாகாதிபதி தந்தைக்கு பாதகம் செய்வாரா?
கே  குரு
 சந்
ராசி  செவ்
 சுக்
சனி
ரா
சூ
பு

பி. ஜெயசித்ரா, கரூர்.

கேள்வி :

ஐந்துமுறை கடிதம் எழுதியும் பதில் தராததால் வருத்தத்தில் இருக்கிறேன். மகள் ஜாதகப்படி ஒன்பதாமிடம் பாதகஸ்தானமாகி அதில் சுக்ரன், ராகு, சனி இருப்பதால் தந்தைக்கு தீமை செய்யுமா? தந்தைக்காரகன் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு 12-ல் உள்ளதால் தந்தைக்கு எப்படி இருக்கும்? இங்குள்ள ஜோதிடர்கள் சுக்கிரன் ஒன்பதில் ஆட்சியாகவும், சனி உச்சமாகவும் இருந்து உடன் ராகு இருப்பதால் பாதகஸ்தானம் வலுப்பெற்று இருக்கிறது. தந்தைக்கு கெடுதல்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். எனக்கும் மிகவும் பயமாக உள்ளது. விளக்கம் தருமாறு வேண்டி பாதம் பணிகிறேன்.

பதில்:

(கும்ப லக்னம், கும்ப ராசி. 5-ல் குரு. 6-ல் செவ். 8-ல் சூரி, புத. 9-ல் சுக், சனி, ராகு. 18.9.2013, மாலை 4.39, கரூர்.)

பாதாகாதிபதி சனி, செவ்வாய், ராகு ஆகியவற்றின் தொடர்பை பெற்றாலே பாதகம் செய்யும் வலுவிழந்து போவார். உங்கள் மகள் ஜாதகத்தில் பாதாகாதிபதி சுக்கிரன் ஒரேடிகிரியில் சனி, ராகுவுடன் இணைந்து நீச செவ்வாயின் பார்வையைப் பெற்றதால் பாதகாதிபத்தியம் கெட்டுப் போய்விட்டது. அதேநேரத்தில் தந்தைக்குரிய ஒன்பதாம் அதிபதி இதுபோல பலவீனமாகி, சூரியனும் எட்டில் மறைவது ஒன்பதாமிடத்தைக் கெடுக்கும்தான். ஆனால் வலு இழந்த ஒன்பதாம் பாவத்தையும், பாக்கியாதிபதியையும் குரு பார்ப்பது அதற்கு நிவர்த்தி.

எந்த ஒரு பலவீனமும், தோஷமும் லக்னம், ராசி வலுவிழந்த ஜாதகங்களிலும், சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசையிலும்தான் நடக்கும். உங்கள் மகளுக்கு லக்னம், ராசி, லக்னாதிபதி ஆகிய மூன்று அமைப்பையும் குரு பார்ப்பதோடு, பாதகாதிபதி சுக்கிரனின் தசையும் வரப்போவது இல்லை. எனவே கவலைகளுக்கு இடமில்லை.

1 Comment on Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (21.2.2017)

Leave a Reply