adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (14.2.17)

. முனியாண்டி, சென்னை.

கேள்வி :
ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரை விடாமல் படித்து வருகிறேன். போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் அது. மகளுக்கு எல்லாப்பொருத்தமும் பார்த்து 11.9.2011 அன்று திருமணம் செய்து வைத்தேன். வயிற்றில் குழந்தை ஏழுமாதக் கருவாக இருக்கும்போது பெண்ணின் மீதுமருமகன் சந்தேகப்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குநடந்து வருகிறது. என் பேத்தி தந்தையின் முகத்தை கூட இன்று வரைபார்க்கவில்லை. எம்.காம் படித்துள்ள மகள் கணவர் தன்னை சேர்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். கணவன் வேலைக்கு போக      வேண்டாம் என்று சொன்னதால் வேலைக்கும் செல்லவில்லை. வயதும் 34 ஆகிவிட்டது இனி வேலை தேட முடியுமா? எங்களுக்குப் பிறகுமகளுக்கு யாருமே இல்லை. விவகாரத்து வழக்கு என்னவாகும்?பேத்தியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
பதில்:
குரு கே சந் பு  சூ சுக்
ராசி  செவ் சனி
சூ,பு செவ் ரா
ராசி சந் சுக்
குரு  சனி
 
            (கணவன் தனுசுலக்னம் ரிஷபராசி 5ல் குரு,கேது 6ல் புத, 7ல் சூரி,சுக் 8ல் செவ்,சனி 25.6.1976 இரவு 7-35 மதுரை- மனைவி தனுசு லக்னம், கடகராசி 6ல் சூரி, செவ், புத, 7ல் ராகு, 8ல் சுக், 11ல் சனி, 12ல் குரு, 13.6.1983 இரவு 8-24 மதுரை)
எல்லாப் பொருத்தமும் பார்த்தீர்கள், சரி. கல்யாணம் செய்த நாள் சரியான நாள்தானா என்று பார்த்தீர்களா? கடகராசியில் பிறந்த உங்கள் பெண்ணிற்கு சந்திராஷ்டம நாளன்று திருமணம் செய்து வைத்திருக்கிறீர்கள். ஒருவேளை வாக்கியப் பஞ்சாங்கப்படி உங்கள் மகளுக்கு மிதுனராசி என்று பார்த்திருந்தீர்களேயானால் வாக்கியத்தால் வாழ்க்கை சிக்கலாகிப் போன எத்தனையோ நபர்களில் உங்கள் மகளும் ஒருவராக இருப்பார்.
எட்டில் செவ்வாய்- சனி இணைந்து, மனைவி அமைப்பே வலுவிழந்து போன ஒருவருக்கு வெறும் பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்த்து உங்கள் மகளை திருமணம் செய்ததும் தவறு. ஆனால் அனைத்தும் நமது கர்மாவின்படிதானே நடக்கும்? இவர்கள் இருவரும் இணைந்து உங்கள் பேத்தி எனும் ஜீவன் இந்த உலகில் ஜனிக்க வேண்டும் என்கிற விதி இருக்கும்போது அதை மாற்ற யாரால் முடியும்?
பேத்தியின் ஜாதகப்படி ஒன்பதுக்குடைய சூரியன் எட்டில் மறைந்து அவரை உச்ச சனி பார்த்ததாலும், ராசிக்கு ஒன்பதாமிடமும் பலவீனமானதாலும் தகப்பனுடன் இருக்கும் அமைப்பு இல்லை. ஆனால் ஜாதகம் வலுவாக இருப்பதால் எதிர்காலத்தில் நன்றாக இருப்பார். மகளுக்கும் லக்னாதிபதி பனிரெண்டில் மறைந்தாலும் ஐந்து கிரகங்களை குரு பார்ப்பதால் நல்லபடியாக பிழைத்துக் கொள்வார்.
. முருகேசன், கொடுமுடி.
கேள்வி :
உங்கள் எழுத்துகளைப் படிக்கும் பாக்கியத்தை வழங்கியமாலைமலருக்கு கோடிகோடி நன்றிகள். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்குபடித்தும், எழுதியும் வருகிறேன். அரசுவேலை கிடைக்குமா? அல்லதுதனியார் வேலைதானா? ஜோதிடம் கற்பதிலும் ஆர்வம் உள்ளது. ஜோதிடப்படிப்பு எனக்கு உண்டா? எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
செவ் குரு
ரா ராசி சுக்
சந் சனி சூ பு
(விருச்சிக லக்னம், தனுசு ராசி. 2-ல் சனி. 4-ல் ராகு. 5-ல் செவ். 7-ல் குரு. 9-ல் சுக். 11-ல் சூரி, புத. 20.9.1988, காலை 11 மணி, கொடுமுடி)
விருச்சிக லக்னமாகி லக்னத்தை குரு பார்த்து, லக்னாதிபதி அம்சத்தில் ஆட்சி பெற்ற யோகஜாதகம். ராசிக்குப் பத்தாம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால் அடுத்து நடக்க இருக்கும் சந்திரதசை சூரியபுக்தியில் 2018 ல் அரசுப்பணியில் இருப்பீர்கள். சந்திர கேந்திரத்தில் புதன் உச்ச வலுவுடன் இருப்பதால் ஜோதிடம் உங்களுக்கு வரும். ஜோதிட சூட்சுமங்களும் புரியும். ஜோதிடம் படிக்கலாம். ஆனால் மற்றவர்களுக்குப் பலன் சொல்ல வராது. ஏன் என்று யோசித்துப் பாருங்கள். ஜாதகம் யோகமாக இருப்பதால் எதிர்காலம் கவலையின்றி இருக்கும்.
நா. பாஸ்கரன், திண்டுக்கல்.
கேள்வி :
குருஜி அய்யாவிற்கு நமஸ்காரம். அரசுவேலையில் இருக்கிறேன். ஞாபகமறதி இருப்பதால் என்ன சொல்லிக் கொடுத்தாலும் புரியவில்லை. அவமானமாக இருக்கிறது. மற்றவர்களை போல புரிந்து கொண்டுஎன்னால் வேலை செய்ய முடியவில்லை. நீங்கள்தான் வழிகாட்டவேண்டும். ஏதாவது பரிகாரம் உள்ளதா?
பதில்:
குரு ரா
ராசி
சனி  சந்,சூ சுக்
பு செவ்
(கும்ப லக்னம், சிம்ம ராசி. 2-ல் குரு. 5-ல் ராகு. 7-ல் சூரி, சுக். 8-ல் புத, செவ். 12-ல் சனி. 20.8.1963, இரவு 7.30 மணி, திண்டுக்கல்).
ஐந்திற்குடைய புதன் உச்சமானாலும் ராசி சந்தியில் அமர்ந்து எட்டில் மறைந்து செவ்வாயுடன் இணைந்தாலும், ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து கடந்த பதினெட்டு வருடங்களாக தசை நடத்தியதாலும் உங்களுக்கு எதிலும் ஞாபக மறதிக் கோளாறு இருந்திருக்கும். தற்போது குருதசை ஆரம்பித்து விட்டதால் முன்னைப்போல் மறதி இருக்க வாய்ப்பில்லை.
சனிக்கிழமை இரவு தோறும் சிறிது எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் சாதத்தில் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். நான்கு வாரங்களில் முன்னேற்றம் தெரியும். ஒரு வருடத்திற்காவது இதை தவறாமல் செய்யுங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நான்கு கிலோ கருப்பு உளுந்தை ஒரு விதவைப் பெண்மணிக்கு தானம் செய்யுங்கள்.
எம். முருகன், கொசப்பாளையம்.
கேள்வி:
ஜோதிடத்தின் சுப்ரீம் கோர்ட்டிற்கு வணக்கம். ஆறுமாதங்களுக்கு முன் உங்களிடம் கேள்வி கேட்டு துல்லிய பதிலும் கிடைக்கப் பெற்றேன். இருபது ஆண்டுகளாக புதுவையின் ஒதுக்குப்புறமாக தையலகம் நடத்திவரும் எனக்கு நகரின் மையப்பகுதியில் பெரிய அளவில் தொழில் செய்துதொழிலதிபராக வேண்டும் என்ற முயற்சி வெட்டி வெட்டிச் செல்கிறது. அதேநேரத்தில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் முன்னேற்றம்வந்திருக்கிறது. தற்போது மனைவி ஒன்றரைமாத கர்ப்பிணியாகஇருக்கிறாள். மருத்துவரிடம் ஆலோசித்ததில் 40 வயதிற்கு மேல்பிரசவிப்பது சிக்கலாக இருக்கும் என்று சொல்கிறார். உடலும், உள்ளமும்பலவீனமாக இருக்கும் மனைவி உயிருக்கு ஆபத்து வருமோ என்றுஅழுகிறாள். குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்றகுழப்பத்தில் இருக்கிறேன். தெளிவான முடிவிற்காக இந்த அவசரமனுவை தங்களிடம் தாக்கல் செய்கிறேன். மனைவி அஞ்சுவது போல்அவளது ஆயுளுக்கு பங்கம் உண்டா? அல்லது என் ஒரே மகளுக்குவரப்போகும் உடன்பிறப்பிற்கு பேண்ட் தைப்பேனா? பாவாடைதைப்பேனா ?
பதில்:
குரு சந் செவ்
ராசி  சனி
பு சூ  ல,சுக் ரா
( துலாம் லக்னம் மேஷராசி 1ல் சுக்,ராகு. 2 ல் சூரி. 3ல் புத 6ல் குரு. 8ல் செவ். 10ல் சனி 15.12.1975 காலை 4-15 புதுவை)
உங்களுக்கு ராகுதசையில் குருபுக்தி வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாலும், மனைவிக்கு ஏற்கனவே குருதசை நடந்து கொண்டிருப்பதாலும் இன்னொரு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தை நல்ல யோகத்துடன் பிறக்கும். இக்குழந்தையின் வருகை உங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தைத் தரும்.
மனைவியின் ஜாதகப்படி லக்னாதிபதி தசை நடந்து கொண்டிருப்பதாலும், எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டைப் பார்த்து, ஆயுள்காரகன் சனி திக்பலமாக   உள்ளதாலும் ஆயுள் குற்றம் இல்லை. எழுபது வயதைத் தாண்டி வாழுவார். பிரசவமும் சிக்கலின்றி நல்லபடியாகவே இருக்கும். பேன்ட் தைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நண்பனுடன் மீண்டும் சேர்வேனா?
ரா. ரகுபதி, பவானி.
கேள்வி:
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாத எனக்கு அதன் மீது நம்பிக்கைமட்டுமல்ல மிகப்பெரிய பற்றையும் ஏற்படுத்தியது நீங்கள்தான். 2014 ஜூன்மாதம் ஒரு பேருந்து பயணத்தின் போது என் நண்பனை சந்தித்துஒரு வருடம் வரை நட்பில் எவ்வித களங்கமும் இன்றி பழகினோம். ஒருவர்மீது ஒருவர் சுயநலம் இல்லாமல் ஆழ்ந்த அன்புடனும், அக்கறையுடனும் பழகிய எங்கள் நட்பில் 28.6.2015 அன்று வாய்ச்சண்டையால் ஏற்பட்ட சிறுவிரிசல் இறுதியாக அந்தவருடம் என்பிறந்த நாளில் நிரந்தர பிரிவாகிவிட்டது. இந்த மனவருத்தம் காரணமாகஇந்தியன் நேவியில் கிடைத்த மத்திய அரசு கப்பல் பணியையும் தவற விட்டு விட்டேன். எனக்கு இருக்கும் இதே வருத்தம் (Mental De p ression)அவனுக்கும் இருப்பதாக அறிகிறேன். ஆனாலும் ஏதோ ஒருகாரணத்திற்காக என்னைப் பிடிக்காமல் இருப்பது போல் காட்டிக்கொள்கிறான். எல்லோராலும் அவமானப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டஎன்னை முழுமையாக புரிந்து கொண்டு அன்பிற்காக மட்டுமே பழகியஉயிர் நண்பனும் நிராகரிப்பது சொல்ல முடியாத வேதனையை தருகிறது. நானும் நண்பனும் மீண்டும் சேருவோமா? எங்கள் நட்பு துளிர் விடுமா? நாங்கள் எப்போது சேர்வோம்?
பதில்:
ல கே
சனி ராசி
சூ,பு,குரு சுக்,செ  சந்
சனி கே சந் ல,சுக் சூ,பு,செவ்
ராசி
 குரு
              (நண்பன் 1: மேஷ லக்னம், துலாம் ராசி. 1-ல் கேது. 8-ல் சூரி, புத, சுக், செவ், குரு. 11-ல் சனி. 20.11.1995, பகல் 3.56, ஈரோடு, நண்பன் 2: ரிஷப லக்னம், மேஷ ராசி. 1-ல் சூரி, புத, சுக், செவ். 8-ல் குரு. 11-ல் சனி, கேது. 12.6.1996, அதிகாலை 5.25, ஈரோடு)
உங்கள் இருவருக்கும் மனதைப் பாதிக்கும் அளவிற்கு நட்பு உருவானதற்கு ஜோதிடரீதியாக பல காரணங்கள் உள்ளன. ஒருவரின் லக்னம் இன்னொருவரின் ராசியானதும், இருவரின் ராசியும் சமசப்தமமாக அமைந்ததும் அவற்றில் ஒன்று.
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி உள்பட அனைவரும் எட்டில் மறைந்து ஆணும், பெண்ணுமற்ற கிரகமான ஆறுக்குடைய புதனின் சாரத்தில் அமர்ந்தது நீங்கள் மற்றவர்களை போலல்லாமல் வித்தியாசமான ஒருவர் என்பதை உணர்த்துகிறது. இன்னொரு நிலையாக வலுப்பெற்ற அலிக்கிரகமான சனி லக்னத்தையும், லக்னாதிபதியையும் பார்ப்பதும், ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் வலுவிழந்திருப்பதும் உங்களுடைய ஆழமான நட்புணர்வுக்கு காரணம். மனோகாரகனான சந்திரனை மூன்று டிகிரிக்குள் நெருங்கி வலுவிழக்க செய்த ராகுவின் தசையோடு உங்களின் துலாம்ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் மெண்டல் டிப்ரஷனில் இருக்கிறீர்கள்.
இதுபோன்ற அமைப்புகள் எதுவும் உங்கள் நண்பரின் ஜாதகத்தில் இல்லை. அவருக்கு பெண் ராசியான ரிஷபலக்னமாகி லக்னத்தில் பெண்கிரகமான சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் உங்களை போன்ற முரண்பட்ட ஆர்வங்கள் இல்லாமல் ஒரு பெண்ணின் மீதுதான் அவருக்கு ஈர்ப்பு இருக்கும். அதேநேரத்தில் அவரது மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடந்ததால் உங்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு ஒரு வருடத்தில் பிரிவும் ஏற்பட்டது. தற்போது உங்கள் நண்பருக்கு சுக்கிரதசையும், அஷ்டமச்சனியும் முடியப் போகும் நிலையில் உங்கள் இருவரின் நட்பு தொடர்வதற்கு வழியில்லை. இதனால் உங்கள் நண்பர் பாதிக்கப்பட மாட்டார்.
ஆனால் உங்கள் ஜாதகப்படி தற்போது ஆறுக்குடையவனின் சாரத்தில் அமர்ந்த   பனிரெண்டுக்குடைய குரு, எட்டில் அமர்ந்து தசை நடத்த தொடங்கி இருப்பதால், அதாவது 6,8,12 மிட தொடர்புகள் வலுப்பெற்று, லக்னம், ராசிக்கு சுபர் சம்பந்தமே கிடைக்காததால் உங்களுக்கு சாதகமாக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதுபோன்ற எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் கவுன்சிலிங் செல்வது நல்லது.
எட்டில் மறைந்து வலிமை இழந்து, வலுப்பெற்ற சனியின் பார்வையில் உள்ள கிரகங்களும், சந்திரனுடன் இணைந்த ராகுவும் உங்கள் மனதை பூரணமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஜாதகப்படி நான் சில அறிவுரைகளைச் சொன்னாலும் அதைத் துளியும் கேட்கும் நிலையில் தற்போது நீங்கள் இருக்க மாட்டீர்கள். நண்பனைப் பற்றிய எண்ணங்களே திரும்பத் திரும்ப உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஆயினும் பரம்பொருளின் துணையுடன் இந்த மாயச்சுழலில் இருந்து நீங்கள் விடுபட முடியும்.

செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும் முருகன்கோவிலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டு பெண்களை மணந்த எம்பெருமான் அழகிய தமிழ்வேலன் உங்களை ஆக்கிரமித்திருக்கும் மாறுபாடான எண்ணங்களில் இருந்து படிப்படியாக உங்களை வெளியே கொண்டு வருவார். ஆழமான நட்பினைப் பற்றிக் கேள்வி கேட்டால் அதைப் புரிந்து கொள்ளாமல் வேறு எதைப் பற்றியோ இவர் பதில் தருகிறாரே என்று என்மீது உங்களுக்கு கோபம் வரும்தான். ஆனால் உங்களைப் பற்றி உங்களுக்கே புரியாத சில விஷயங்களை உங்கள் ஜாதகத்தின் கிரகநிலைகள் எனக்குத் தெரிய வைத்ததால் இந்த பதில்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (14.2.17)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *