adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 11 (4.11.2014)

லட்சுமி, சேலம்.

கேள்வி :
எங்கள் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. இருதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய் விரிவடையாமல் உள்ளதாம். ஒரு வருடமாக மருந்து, மாத்திரை கொடுக்கிறோம். கண்டிப்பாக மூன்று வயதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? குழந்தையின் ஆயுள் எவ்வளவு?
பதில்:
குரு கே  சந்
ராசி
செவ்,பு ரா சூ சனி சுக்
மகர லக்னம் மிதுன ராசியாகி லக்னாதிபதி சனி நீச சூரியனுடன் இணைந்து பத்தில் உச்சமாகி பதினொன்றில் செவ்வாய், புதன், ராகு இணைந்து ஐந்தில் இருக்கும் குரு லக்னத்தையும் நீச சுக்கிரனையும் ராசிநாதன் ராகுவையும் பார்த்த ஜாதகம்.
லக்னாதிபதியும் ஆயுள் காரகனுமான சனியும், ஆயுள் ஸ்தானாபதி சூரியனும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். சனி அஸ்தங்கம் அடைந்திருக்கிறார். சனியால் சூரியன் நீசபங்கம் அடைந்திருக்கிறார். ராசிநாதன் புதனும் ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்திருக்கிறார்.
தற்போது குருதசை ராகுபுக்தி அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கிறது. இந்த ராகுபுக்தியில் குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்கும். ஆறுக்குடைய புதன் ஆறுக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்து ராகுவுடன் இணைந்து கெட்டதால் நோய் கண்டிப்பாக தீரும். எட்டிற்குடையவன் நீச பங்க வலுப்பெற்றும், லக்னத்தை குருவும் பார்ப்பதால் குழந்தைக்கு ஆயுள் பங்கம் இல்லை. ஆனால் விரயாதிபதி குருவின் தசை நடக்கும் ஐந்தரை வருடமும் குருவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீசமாகி இருப்பதால் கஷ்டமான காலமே.
ராகுபுக்தி ஆரம்பித்ததும் ஸ்ரீகாளஹஸ்தி சென்று வழிபடுங்கள். ஆபரேஷன் செய்வதற்கு முன்பு குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் அன்று திருநள்ளாறு சென்று சனிபகவானின் சன்னதியில் கோவில்நடை திறந்து இரவு மூடும்வரை கோவிலுக்குள்ளேயே சனிபகவானின் எதிரில் நாள் முழுவதும் குழந்தையை இருக்கச் செய்யுங்கள். அவர் குழந்தைக்கு நிச்சயம் ஆயுள் பலத்தை தருவார்.
ப. குமார், பள்ளிக்கரணை.
கேள்வி:
திரைப்படத் துறையில் பத்து வருடம் உதவி இயக்குனராக இருந்தேன். மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா? என் ஜாதகத்திற்கு ஏற்ற தொழில் எது?
பதில்:
சனி  ல கே
ராசி  சந்
 குரு ரா சூ பு  செவ் சுக்
மிதுன லக்னம் கடக ராசியாகி லக்னாதிபதி புதன் சூரியனுடன் ஆறில் மறைந்து புதனையும் சந்திரனையும் பனிரெண்டில் உள்ள சனி பார்க்கும் ஜாதகம். ஐந்தில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து ஆட்சி, ஏழில் குரு ராகுவுடன் இணைவு.
இப்போது என்ன தொழில் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. ஜீவனாதிபதி குரு ராகுவுடன் இணைந்ததால் டிரைவராக இருக்கிறீர்கள் என்று கணிக்கிறேன். தெரிந்த தொழில்கள் எது என்று குறிப்பிட்டிருந்தால் அதில் ஏற்ற தொழில் எது என்று சொல்ல முடியும்.
அடுத்த மாதம் முதல் சுக்கிர தசையில் சனிபுக்தி நடக்க இருக்கிறது. சனி சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும் கடகராசிக்கு சனிப்பெயர்ச்சியின் மூலம் வேலை, தொழில் விஷயங்கள் நன்றாக இருக்கும் என்பதாலும் மீண்டும் சினிமாவிற்கு செல்வீர்கள். நான் என்ன பலன் சொன்னாலும் 2021ல் சுக்கிரதசை முடியும் வரை நீங்கள் சினிமாவை விடமாட்டீர்கள், சினிமாவும் உங்களை விடாது. சூரியதசைக்கு பிறகே மாற்றங்கள் இருக்கும்.
க. கிருஷ்ணன், சென்னை – 8.
கேள்வி:
2008 ம் ஆண்டு காதலித்து எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டேன். வாழ்க்கை மூன்று மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மனைவி தற்கொலை செய்து கொண்டாள். கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு எப்போது முடியும்? மறுமணம் உண்டா? வெளிநாட்டு யோகம் இருக்கிறதா? மனைவியை இழந்த வேதனையில் தவிக்கிறேன். குருஜி ஐயாவின் நல்லபதில் வேண்டி பாதம் தொட்டு பணிகிறேன்.
பதில்:
ல கே சந்
ராசி குரு
 சனி
 சூ,பு சுக்,செ ரா
மீன லக்னம் மிதுன ராசியாகி லக்னாதிபதி குரு உச்சம் பெற்று ஆறில் சனி, ஏழில் ராகு, எட்டில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் அமர்ந்த ஜாதகம். பொதுவாக சுக்கிரன் வக்ரம் பெற்றவர்களுக்கு திருமண வாழ்க்கை நிம்மதியாக இருந்தது இல்லை. எட்டில் மூன்று கிரகங்கள் சூரியனுடன் இணைந்தும் ஒன்று கூட அஸ்தங்கம் ஆகாத அபூர்வஜாதகம் உங்களுடையது. புதனும் சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகி இருந்தால் நன்மை.
எட்டில் உள்ள கிரகங்களை சனி பார்த்து, வம்பு வழக்கு ஸ்தானமான ஆறில் உள்ள சனியின் தசையில் சுயபுக்தி நடக்கிறது. அடுத்து 2016ல் ஆரம்பிக்க இருக்கும் பாதகாதிபதி புதன் புக்தியில் வழக்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் கவனம் தேவை. சனி எட்டுக்குடைய சுக்கிரன் சாரம் பெற்று இருக்கிறார். சனிதசை சுக்கிரபுக்தி இறுதியில் மறுமணமும் வெளிநாட்டு யோகமும் அமையும்.
மருத்துவர் ஜி. சிவபெருமான், திருவாலி.
கேள்வி:
நான் சித்த வைத்தியர். தொழில் பிரகாசிக்குமா? அல்லது மாறுமா? சொந்த வீடு எப்பொழுது? முருகன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் முடிக்க ஆசை நிறைவேறுமா?
பதில்:
சந்  குரு
ராசி  செவ் சுக்,கே
ரா சூ பு
 ல சனி
துலாம் லக்னம் ரிஷப ராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் பத்தாமிடத்தில் செவ்வாய் கேதுவுடன் இணைவு. லக்னத்தில் சனி, ஒன்பதில் குரு, பதினொன்றில் சூரியன் புதன்.
தொழில் வீட்டில் நீச செவ்வாயும் கேதுவும் இணைந்து அந்த வீட்டுக் குடையவன் உச்சமானதால் சித்த வைத்தியராக இருக்கிறீர்கள். பத்தாமிடத்தில் செவ்வாய் நேர்வலுப் பெற்று இருந்தால் எம்.பி.பி.எஸ் டாக்டராகி இருப்பீர்கள். கடைசி வரை இதுவே உங்கள் தொழில்.
நடக்கும் புதன் தசையில் சுக்கிர புக்தியில் 2017 ல் சொந்த வீடு கட்டுவீர்கள். தசாநாதன் புதனின் வீட்டில் ஒன்பதாமிடத்தில் குருபகவான் இருந்து லக்னத்தில் உள்ள உச்சசனியைப் பார்ப்பதால் புதன்தசை குரு புக்தியில் முருகனுக்கு திருப்பணி செய்ய முடியும்.
பீ. செல்வக்குமரன், சென்னை-41.
கே  குரு
ராசி  செவ்
சனி,ல சந்
 பு சூ சுக் ரா
கேள்வி :
நான் மகம் நட்சத்திரமா? பூரம் நட்சத்திரமா? தெளிவு படுத்துங்கள். திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா?
பதில்:
மகம் நட்சத்திரம் சிம்ம ராசி தான். அடுத்த வருடம் ஆவணி மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.
எஸ். ஞானசுந்தர், திருநெல்வேலி.
கேள்வி :
அரசியல் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. ஜாதகப்படி அரசியலில் வெற்றி பெற முடியுமா? எனது ராசி, நட்சத்திரம் என்ன?
சந் ரா சுக் சூ பு செவ்
 ல ராசி
குரு
 சனி கே
பதில்:
கும்ப லக்னம் மீன ராசியாகி லக்னாதிபதி சனி பகவான் உச்சம் பெற்று கேதுவுடன் இணைந்து சுக்கிரன் பார்வையை பெற்ற ஜாதகம். பத்துக்குடைய செவ்வாய் ஐந்தில் ஆட்சி பெற்ற புதனுடன் இருக்கிறார். பத்தாம் இடத்தை சூரியன் பார்க்க அந்த சூரியனை நீசபங்கம் பெற்ற குரு பார்ப்பதாலும் அடுத்து சுக்கிரதசை வரப்போவதாலும் அரசியலில் ஜெயிக்க முடியும். அஷ்டமச் சனி முடிந்து விட்டதால் பதவி கிடைக்கத் தடையில்லை. நீங்கள் மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம்.

பி. கந்தசாமி, ஈரோடு.
கேள்வி :
யு.கே.ஜி. படிக்கும் என் மகன் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டு பாடம் எழுத வேண்டும் என்பதற்காக ஒரு மணி நேரம் சாப்பிடுகிறான். பள்ளியில் டீச்சர் நன்றாக படிக்கிறான் என்கிறார்கள். வீட்டில் படிப்பதில்லை. படி என்று மிரட்டினால் வீட்டை விட்டு போய் விடுவேன் என்கிறான். நானும் என் பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிபோனவன் தான். அதுபோல நடக்குமோ என்று பயமாக இருக்கிறது. என் மகனின் படிப்பு, எதிர்காலம் எப்படி?
பதில்:
சந் ராசி  செவ் கே
குரு ரா
சூ பு சுக் சனி
யு.கே.ஜி. படிக்கும் ஐந்து வயது மகனைப் பற்றி நீங்கள் கேட்கும் கேள்வி சிரிப்புத் தான் வர வைக்கிறது. குழந்தைகளை கொடுமைப்படுத்துவதற்கு ஒரு அளவே இல்லையா அய்யா.
உங்கள் மகனுக்கு மேஷ லக்னம் கும்ப ராசியாகி லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று கேதுவுடன் இணைந்தும் சூரியன், சுக்கிரன், குரு நீசம் பெற்றும் சனி ஆறில் புதன் ஏழில் அமர்ந்த ஜாதகம். உங்கள் மகனின் ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் நீசமாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது ஒரு சிறப்பான யோகம். புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் நன்றாகப் படிப்பார். லக்னாதிபதி செவ்வாய் சூட்சும வலுப் பெற்று இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வீட்டை விட்டு ஓடிப்போக மாட்டார். கவலை வேண்டாம்.
ஜி. ஆனந்த், கீழரங்கநாதபுரம், தூத்துக்குடி.
கேள்வி :
நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை. 22வயது இளைஞன் எப்படி இருப்பானோ அதற்கு நேர்மாறாக இருக்கிறேன். என்னை விட ஒருவர் சிறப்பாக படிக்கிறார் என்றால் பொறாமை வருகிறது. முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் எப்படி என்று தெரியவில்லை. கூச்ச சுபாவம், தெளிவாக முடிவெடுக்க முடியாதது, உலகத்தோடு ஒத்துவாழத் தெரியாதது போன்ற குணங்கள் இருக்கின்றன. இந்த நிலைமை மாறுமா?
பதில்:
 கே செவ்
ராசி
சனி
ரா  சந் சுக்,ல சூ,பு குரு
துலாம் லக்னம் துலாம் ராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்து சனி நான்கில் ஆட்சி, ஒன்பதில் செவ்வாய் கேது, பனிரெண்டில் சூரியன், புதன், குரு அமர்ந்த யோக ஜாதகம். 24 வயது வரை குருதசை நடக்கிறது.
யோகாதிபதிகள் வலுப்பெற்று லக்னாதிபதியும் ஆட்சி பெற்ற யோகமான ஜாதகம் உங்களுடையது. அதே நேரத்தில் 24வயது வரை துலாம் லக்னத்திற்கு வரக்கூடாத குருதசை நடக்கிறது. குரு பனிரெண்டில் மறைந்து ஆறாம் இடத்தை பார்ப்பதால் குருதசை வரை அனைத்துமே ஏமாற்றம், அவமானம், தோல்விதான்.

24வயதிற்குப் பிறகு யோகாதிபதி சனிதசை ஆரம்பிப்பதால் அதன் பிறகு யோகத்தை அனுபவிப்பீர்கள். சனி நான்கில் வலுப்பெற்று லக்னத்தைப் பார்ப்பதால் நீங்கள் சொன்ன குணங்கள் இருக்கத்தான் செய்யும். படிப்படியாக இந்த குணங்கள் மாற ஆரம்பிக்கும். எதிர்காலத்தைப் பற்றி கவலையே இல்லை. சனி ஜீவனஸ்தானத்தைப் பார்த்து லக்னத்தில் உள்ள சந்திரனையும் பார்ப்பதால் எதிர்காலத்தில் ரெயில்வே துறையில் வேலை செய்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *