adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

மேஷம்:

இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலமாக. இரண்டாம் இடத்திற்கு குரு வருவதால். பொருளாதார மேன்மையினை. மேஷ ராசிக்காரர்கள் அடையப் போகிறீர்கள். இந்த வாரம் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சம்பவங்களும், ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் இந்த வாரம் உண்டு. மேஷத்திற்கு இனி எல்லாம் வெற்றிதான்.


பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே உண்டு என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுடைய தடாலடி நடவடிக்கைகளால் உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை, தொழில்களில் இடையூறுகள் இல்லாமல் சகஜமாகவே செல்லும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
 
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
 
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
 
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சமாகவும் சுபத்துவமாகவும் இருக்கின்ற யோக மாதம் இது.  மேஷத்தினர் பலருக்கு முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இப்போது நடைபெறும். இளைஞர்களுக்கு இருக்கின்ற நிலையில் இருந்து மாறுகின்ற நல்ல அமைப்பும். நினைத்தது நடக்கின்ற நிலையும் இருக்கிறது. கேட்டது கிடைக்கும் என்பதால் மேஷத்தினர் எதிலும் தயங்காமல் முயற்சியை செய்ய வேண்டிய மாதம் இது. உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும்.


தொழில்துறையில் தேக்கநிலை மாறும். எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சுலபமாக  சமாளிப்பீர்கள். கணவன்-மனைவி உறவில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். இதுவரை மற்றவரை புரிந்து கொள்ளாதவர்கள். அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். என்ன பிரச்னை ஏற்பட்டாலும் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும். அரசியல்வாதிகளுக்கு இது நல்லநேரம். மேலிடத்தின் பார்வையில் உங்களின் உழைப்பு தென்பட்டு பதவிகள் கிடைக்கும்.

மேஷத்தினர் ஒருநிலையில் கோபக்காரர்கள் என்பதால் ராசியை வலுத்துப் பார்க்கும் செவ்வாய் துடுக்கான பேச்சைத் தருவார். எனவே வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. ஆறு பன்னிரெண்டாம் இடங்களில் இருக்கக்கூடிய ராகு கேதுக்கள். செலவுகளை சுருக்கி, சேமிப்பை. கொடுப்பார்கள் என்பதால். எதிர்காலத்திற்கு சேமிப்பதற்கான அமைப்புகள் இப்போது மேஷத்தினருக்கு உருவாகும். சிலருக்கு வீடுகட்டுதல், இடம் வாங்குதல் புதுவாகனம் அமைதல், போன்ற சுபகாரிய செலவுகளும் உண்டு. கண்டிப்பாக செலவு செய்தே ஆகவேண்டிய விஷயங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி விரயங்களைத் தவிருங்கள். சுக்கிரன் நட்பு வீட்டில் இருப்பதால் பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம்தேதி காலை 8.17 முதல் 4-ம்தேதி மாலை 4.21 வரையும், மாதக் கடைசியில் 29-ம் தேதி பகல் 2.09 மணி முதல் 31-ம்தேதி இரவு 10.56 மணி வரையும்  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537