மகரம்: மாலைமலர் வார ராசிபலன்கள் (9.1.2017 – 15.1.2017)

மகரம்:

எட்டில் இருக்கும் ராகுவும், செவ்வாயும் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை லேசாக அசைத்துப் பார்க்கும் சம்பவங்களை நடத்தி வைக்கும் என்றாலும் ராசிநாதன் சனி பதினொன்றில் அமர்ந்து ராசியை பார்ப்பது கெடுபலன்களை தடுக்கும் அமைப்பு போல செயல்படும் என்பதால் மகரராசிக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.

தனியார்  துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த வாரம்  நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இப்போது நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம்  உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.

 

13 Comments on மகரம்: மாலைமலர் வார ராசிபலன்கள் (9.1.2017 – 15.1.2017)

 1. பலன்கள் எப்படி இருக்கிறது என்பதனை இந்த வாரம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

 2. அய்யா எனது பெயர் தி.மனோகரன், 08.12.1964 அன்று பிறதேன் ,எனக்கு தற்போது குரு மஹா தசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்ட படிக்கிறேன், எப்போது விடிவு காலம் பிறக்கும்

  • வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 3. எனது மகனுக்கு பெயா் வைக்க வேண்டும். தங்களின் ஆலோசனை தேவை. பிறந்த நாள் 28.03.2016 நேரம் அதிகாலை 6.40

  • எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 4. Now I am at Singapore but jobless.April 2016 only arrived here with s pass.Now I am searching for job.My DOB 07/08/1971.star Avittam 2nd part.Rasi Makaram.Lagnam-Makaram.Shall I get job soon or return to hometown Tamilnadu India pls reply soon through email kaarthi.071@gmail.com.Thank you Sir.I have to this week sir.

 5. Masud Hussain Khan
  Date of birth 3.01.1957
  Morning 4 00 am
  New company would like to start – contracting business
  Jamuna Contracting will suitable or not.
  New contract signing good or time no good. Please reply

  • வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*