விசாகம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

விசாகம்:

உங்களின் நட்சத்திர நாதன் குருபகவான் வருடத்தில் ஆரம்ப நாளில் பரிவர்த்தனை யோகத்தை அடைந்துள்ளதால் இந்த வருடம் உங்களுக்கு நன்றாகவே இருக்கும். தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்களும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தின்படி குரு புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள்.

உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் இம்முறை உங்களுக்கு வருமானங்கள் வரும். வீடு வாகனம் தாயார் போன்ற இனங்களில் நன்மைகள் நடக்கும்.

தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் குரு மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும். தந்தையார் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். வெகுதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code