பூரம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

பூரம்: 

உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் இந்த வருட ஆரம்ப நாளன்று நல்ல நிலையிலும். உங்கள் ராசியை பார்க்கும் அமைப்பிலும் இருப்பது சிறப்பான நிலை என்பதால் இந்த வருடம் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும்.

குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள்.

இந்த வருடம் கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரக்கூடும். அவசியமற்ற ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code