பூரட்டாதி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி:

இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து உங்களின் பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனை அமைப்புகள் இப்போது இருக்கும். சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார்.

பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுகேற்ப செலவு செய்வது நல்லது. செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிருங்கள். கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.

குடும்பத்தில் திருமணம் பூப்புனித நீராட்டுவிழா குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இந்த வருடம் இருக்கும். குடும்பத்துடன் தெய்வீகச் சுற்றுலா நவக்கிரக யாத்திரை போன்றவை மேற்கொள்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும். உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code