பூசம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

பூசம்:

உங்களின் தொழில், வேலை விஷயங்களில் இந்த ஆண்டு நல்ல மாற்றங்களைத் தரும். குறிப்பாக திரவம், ஆன்மிகம், ஜுவல்லரி, செல்போன், புத்தகம், மீடியா, எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். இயல்பாகவே மனசாட்சிப் படியும் கடவுளுக்குப் பயந்தும் நடக்கக் கூடிய உங்களுக்கு இம்முறை இஷ்ட தெய்வ தரிசனம் கிடைக்கும்.

எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். கஷ்டங்கள் எதுவும் இந்த வருடம் உங்களுக்கு இல்லை.

சிலருக்கு மறைமுகமான வழிகளில் வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*