திருவோணம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

திருவோணம்: 

வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். நீண்ட கால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும். குறிப்பிட்ட சிலர் புகழ் பெறுவதற்கான அமைப்பு இந்த வருடம் இருக்கிறது.

வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா, தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும். எதிர்பாராத தனலாபங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக கமிஷனை எதிர்பார்த்து செய்துவந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*