கேட்டை: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

கேட்டை:

இந்த வருட அக்டோபர் மாதம் வரை சனிபகவான் உங்கள் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதால் எதிலும் நீங்கள் நிதானம் காட்ட வேண்டிய வருடம் இது. இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக் கொள்வீர்கள். நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி கோட்டை விடுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

வேலை செய்பவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும்.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். அது நல்லதாகவும் இருக்கும். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும்.

சிலருக்கு கடன் வாங்க வைத்து செலவு செய்ய வைப்பார் சனிபகவான். வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதால் அனைத்திலும் கவனம் தேவை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*