உத்திராடம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

உத்திராடம்:

இந்த வருடம் உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் வளமான வாழ்க்கை உண்டு. சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாக முன்னேற்றத்திற்கானதாக வருமானம் வரும் வகையில்தான் செலவாகும்.

உங்களில் கணக்கிலும், கம்ப்யூட்டரைக் கையாளுவதிலும் புலியான சிலருக்கு இந்த வருடம் புதிய வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*