ஆயில்யம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

ஆயில்யம்: 

உங்கள் நட்சத்திர நாதன் புதபகவான் வருட ஆரம்பத்தில் பரிவர்த்தனை யோகத்தில் வலுவுடன் இருப்பதால் இந்த வருடம் நன்மைகள் மட்டும் நடக்கும் வருடமாக இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். சிலருக்கு வெளிநாடு போக வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும் என்பதால் ஏப்ரல் மாதம் முதலே உங்களில் சிலருக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக ஆரம்பித்து விடும். உங்களின் பண வரவில் சுணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டாமிட ராகுவும் ஆகஸ்டு மாதம் மாறுவதால் இனிமேல் தொழில் வியாபார விஷயங்களில் லாபங்களைப் பார்க்க முடியும். இதுவரை இருந்து வரும் தடைகள் விலகுவதை உணர ஆரம்பிப்பீர்கள்.

அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் மாற்றங்கள் உண்டு. குறிப்பாக ஐ.டி. துறையினருக்கு மேன்மையான பலன்கள் உண்டு. இதுவரை நிலையான வேலையில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்கள் அலுவலகத்தில் மாற்றங்கள் நடைபெற்று நிலை பெறுவீர்கள். இளைய பருவத்தினருக்கு மாற்றங்களைத் தரும் ஆண்டு இது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*