அஸ்தம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

அஸ்தம்:

உங்கள் நட்சத்திர நாதன் சந்திரனே உங்களுக்கு லாபாதிபதி என்பதால் உங்களுக்கு சிறப்பு நற்பலன்களும் நல்லலாபங்களும் இப்போது உண்டு. சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார் என்பதால் அவர் வலுவாக இயங்கும் நாட்களிலும் குருவின் பார்வையைப் பெறும் நேரங்களிலும் மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி இந்த வருடம் நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

வருட பிற்பகுதியில் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

வீடு வாகன விஷயங்களில் இந்த வருடம் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வரும் வருமானத்தை எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள்.

உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் இந்த வருடம் வளமான வருடமாக இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*