அனுஷம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

அனுஷம்: 

இதுவரை ஏழரைச்சனியால் நீங்கள் பட்ட அவஸ்தை எல்லாம் முடிவுக்கு வரும் வருடம் இது. இந்த வருடம் சில நல்ல திருப்பு முனைகளைக் கொடுக்கும். உங்களில் சிலர் வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் இது நல்ல வருடம்தான்.

வருட ஆரம்பத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சனிபகவான் பரிவர்த்தனை பெறுவதால் பலமாக இருக்கிறார். புதிய வாகனம் அமையும். தாயார் வழி நன்மைகள் உண்டு. ஏதாவது ஒரு செயலால் புகழ் அடையும்படி இருக்கும். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையை நிர்ணயிக்கும் வருடமாக இது இருக்கும்.

எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக கீழ்நிலைப் பணியாளரிடம் விலகியே இருங்கள். சனி என்பவர் வேலைக்காரனைக் குறிப்பவர் என்பதால் அவருடைய காரகத்துவங்களில் இருந்துதான் பிரச்னையை ஆரம்பிப்பார். வருடக் கடைசியில்தான் சனி விலகுகிறது என்பதால் மெத்தனமாக இருக்காதீர்கள். அனைத்திலும் நிதானமாக கவனமாக இருங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*