விருச்சிகம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

விருச்சிகம்

விருச்சிகராசிக்கு இந்தமாதம் வீடு, வாகன விஷயங்களில் மாறுதல்களும், புதியவைகளும் இருக்கும். இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இனிமேல் முடிவுக்கு வரத்துவங்கும்.. ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள்.. சில விருச்சிகராசிக்காரர்கள் ஏழு பிறவிக்குப் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் யாருக்காகவும் எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவையே இல்லை. கடவுள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.

ராசிநாதன் செவ்வாய் ராகு கேதுக்களுடன் இணைந்திருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரப்பரப்பாக கோபத்துடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.

கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.

13 Comments on விருச்சிகம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

  • எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

  • அய்யா படாத பாடு படும் எனக்கு அவ்வப்போது கடவுள் போல் எனக்கு ஆலோசனை வழங்குகிறீர்கள்.உங்கள் பதிவை நான் நான் அன்றாடம் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.விருச்சிக ராசி கேட்டை யில் பிறந்த நான் கடவுள் ஏன் என்னை படைத்தார் என்றே தெரியவில்லை.ஏதோ அன்றாடம் வாழாக்கை சுவாரசியமின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது.

  • வணக்கம்
   எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*