மேஷம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

மேஷம்

மார்கழி மாதத்தில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதும் இன்னொரு யோகரான சூரியன் குருவின் வீட்டில் இருந்து குருபகவான் புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதும் மேஷராசிக்கு நற்பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். யோகக்கிரகங்களின் வலுவால் இதுவரை உங்களுக்கு தாமதித்து வந்த தனலாபங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த மாதம் கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கையும் உள்ள மாதமாக இது இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். சுக்கிரபலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் மிக சிறப்பான மாதம்.

1 Comment on மேஷம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

Leave a Reply

Your email address will not be published.


*