மகரம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

மகரம்

மகரராசிக்கு இருந்த பின்னடைவுகள் அனைத்தும் விலகி உங்களை முன்னேற்றப் பாதையில் செல்ல வைக்கும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் நல்ல விதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளை தரும்.

பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும்.

இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.

1 Comment on மகரம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

Leave a Reply

Your email address will not be published.


*