தனுசு: 2016 – மார்கழி மாத பலன்கள்

தனுசு

ராசிநாதன் குருவும் ஜீவனாதிபதி புதனும் பரிவர்த்தனை பெறுவதால் மார்கழி மாதம் தனுசு ராசிக்கு மகத்தான மாதமாக அமையும். ராசிநாதன் பரிவர்த்தனை யோகத்தின் மூலம் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுவதால் இந்தமாதம் உங்களை யாராலும் அசைக்க முடியாது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். சுக்கிரன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும்.எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

1 Comment on தனுசு: 2016 – மார்கழி மாத பலன்கள்

Leave a Reply

Your email address will not be published.


*