கன்னி: 2016 – மார்கழி மாத பலன்கள்

கன்னி

கன்னிநாதன் புதன் தனது நான்காவது கேந்திரத்தில் இருந்து தன் பத்தாம் வீட்டைப் பார்ப்பதும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவானுடன் பரிவர்த்தனையில் இருப்பதும், புதனுக்கும் நான்காமிடத்திற்கும் வலுவைத்தரும் லாபகரமான அமைப்புகள் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும்.

வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.

ராசியின் பாபரான செவ்வாய் சுக்கிரனுடன் இணைவதால் அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

3 Comments on கன்னி: 2016 – மார்கழி மாத பலன்கள்

  1. சுபகாரியம் மங்களம் உண்டு என்கிறீர்கள். ஆனால் என் மனைவி பிரிந்து போய் 2 1/2 வருடம் ஜி. எப்போது நல்லது நடக்கும் ஜி

Leave a Reply

Your email address will not be published.


*