கடகம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

கடகம்

மார்கழிமாத ஆரம்பத்தில் ராசிநாதன் வலுவாக இருப்பதும் பணவரவிற்கு காரணமான இரண்டாமிடத்தை செவ்வாய் பார்ப்பதும் இந்த மாதம் பணவரவில் தடையேதும் இருக்காது என்பதை காட்டுகிறது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாக நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ இந்தமாதம் நல்லபடியாக செட்டிலாகி கைக்கு கிடைத்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை இந்த மாதம் தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.

6 Comments on கடகம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

  1. தங்களின் கணிப்பு கள் மிகச்சரியாக உள்ளது நன்றி

Leave a Reply

Your email address will not be published.


*