விருச்சிகம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

விருச்சிகம்:

விருச்சிகத்தின் யோகாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான சூரியபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து, ஏற்கனவே ஏழரைச்சனியாக உங்களை தொல்லைப்படுத்தி கொண்டிருக்கும் சனியை வலிமை குறைக்கும் விதமாக அஸ்தமனம் செய்வதால் கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது. குறிப்பாக வழக்கு, கடன்தொல்லைகள், கடுமையான மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளால் வருத்தங்கள் போன்றவைகளில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிகத்தினருக்கு ஆறுதல் தரும் மாதம் இது.

ராசியில் சனியும் சூரியனும் இணைந்திருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சாதாரண சிறு விஷயத்திற்காக வாழ்க்கைத்துணையுடன் சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

1,2,3,7,8,9,18,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி காலை 10 மணி முதல் 16-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவரிடமும் மேற்கண்ட நாட்களில் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் வம்பு, வழக்கு எதுவும் வரும் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

5 Comments on விருச்சிகம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

 1. விருச்சிக ராசிக்கு ஜென்மசனி பற்றி விரிவாக எழுதுங்கள் ஜஐயா

 2. Hi Sir. My name is Nalamal.I am from Singapore. For me money issues. Money never stays.. I am viruchegam rasi n Anusham.pls let me know when can I settle money issues

  • ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*