ரிஷபம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

ரிஷபம்:

மாதத்தின் பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதும், ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்திற்கு மாறி ராசியும், ராசிநாதனும் குருபார்வையில் இருப்பதும் ரிஷபராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் டிசம்பர் மாதம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வேதனைகளை, சாதனைகளாக்கி மகிழும் மாதமாக இருக்கும். குறிப்பாக சிலருக்கு வீட்டிலும் வெளியிலும் சுபமான நிகழ்ச்சிகளும், மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் மாதம் இது.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும்.

பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

4,5,6,9,10,11,22,23,24,29 ஆகிய தேதிகளில் பணம் வரும். மாதத்தின் முதல் நாளான 1-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3-ம் தேதி மதியம் 2 மணி வரையும், மாத இறுதியில் 28-ம் தேதி காலை 9 மணி முதல் 30-ம் தேதி இரவு 9 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களையோ புதிய முயற்சிகளையோ செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகளையும் எடுப்பதும் ஒத்தி வைக்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*