மீனம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

மீனம்:

வாழ்க்கைத் துணையை குறிக்கும் ஏழாமிடத்தில் குருபகவான் அமர்ந்து, குடும்ப ஸ்தானாதிபதியாகிய உச்ச செவ்வாயைப் பார்ப்பதால் குறிப்பிட்ட சில மீனராசிக்காரர்களுக்கு சுபகாரியங்கள் நடைபெறும் மாதம் இது. குறிப்பாக இளைய பருவத்தினர் திருமணம் நடக்கப்பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் நிகழ்ச்சியாவது இந்தமாதம் நிச்சயமாக இருக்கும். பத்தாமிடத்தில் சுக்கிரனும் புதனும் ஒன்று கூடுவது தொழில் வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளுக்கு நல்ல பலனை அளிக்கும் என்பதால் டிசம்பர் மாதம் மீனத்திற்கு திருப்புமுனைகளைத் தரும் மாதமாக இருக்கும்.

செவ்வாய் வலுப்பெறுவதால் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இனிமேல் முடிவுக்கு வரத்துவங்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். இளைய பருவ மீன ராசிக்காரர்கள் சிலர் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் கலங்கத் தேவை இல்லை. 2017 ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம். மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும்.

சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிருங்கள்.

3,4,8,10,11,18,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி காலை 8 மணி முதல் 25-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் வீடு கட்ட ஆரம்பிப்பது போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் தவிர்க்கவும். நீண்ட தூர பிரயாணங்கள் எதையும் இந்த தினத்தில் செய்ய வேண்டாம்.

7 Comments on மீனம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

  • எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 1. Dear sir I want to see my horoscope how I can reach you. Now I am in Dubai. How i can contact and send my details. Thanks and regards Abdulla

Leave a Reply

Your email address will not be published.


*