மகரம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

மகரம்:

ராசியில் உச்சமாகி உங்களுக்கு டென்ஷனை ஏற்படுத்திய செவ்வாய் பகவான் மாத பிற்பகுதியில் விலகுவதால் டிசம்பர் மாதம் ஏற்றங்கள் தரும் மாதமாகவே இருக்கும். எட்டாமிடத்தில் ராகு அமர்ந்து, எட்டுக்குடையவன் சனியுடன் இணைந்ததால், இதுவரை உங்களுக்கு தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருந்த எதிரிகளின் கொட்டம் ஒடுங்கும் மாதம் இது. குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்கள் கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு ஆகியவற்றை சுலபமாக ஜெயிப்பீர்கள்.

இந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் இருக்காது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

சிலருக்கு பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். ஆசைப்பட்ட குழந்தைப்பேறு கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும். பெண்களுக்கு சிறப்பான மாதமிது. கணவரும் குழந்தைகளும் சொல்பேச்சை கேட்பார்கள். வயதானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.

5,6,8,9,13,14,15,17,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி மதியம் 1 மணியில் இருந்து 20-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எந்த விஷயத்திற்கும் கோபப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு வரும் என்பதால் கவனம் தேவை.

3 Comments on மகரம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

Leave a Reply

Your email address will not be published.


*