துலாம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

துலாம்:

ஐந்து, பதினொன்றில் இருக்கும் ராகுவும், கேதுவும் துலாம் ராசிக்கு வர இருக்கின்ற பின்னடைவுகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தும் அமைப்பு என்பதாலும், உங்களுடைய வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கும் ஏழரைச்சனி இன்னும் சில மாதங்களில் முடியப் போவதாலும், துலாத்திற்கு துயரங்கள் எதுவும் இல்லாத மாதம் இது. குறிப்பாக   யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் தொழில் ஸ்தானாதிபதி சந்திரனுடன் இணைந்து இந்தமாதம் ஆரம்பிப்பதால் தொழில் அமைப்புகளில் சிக்கல்கள் எதுவும் இல்லாத மாதம் இது.

கேது வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள். ராஜகிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும்.

பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். இளைய பருவத்தினருக்கு மாற்றங்களுக்கான ஆரம்பங்கள் உண்டு. சிலருக்கு பார்த்து வந்த வேலையில் மாற்றம் அல்லது வேறு கம்பெனி மாற்றம் இருக்கலாம். குறிப்பாக எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு நிச்சய மாற்றம் உண்டு. அதே நேரத்தில் இப்போது வரும் மாற்றம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால் அனைத்தையும் விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது.

1,2,5,6,7,18,19,20,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி காலை 9 மணி முதல் 14-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் மேற்கு நோக்கிய பிரயாணங்களை செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம்.

6 Comments on துலாம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

  1. piranthathu muthal 26 vayathuvaraikkum nan badatha kastam illanga nan oru handihaft appa amma illai iya en thanhai veetil nan en annanum anni 2 kulanthaigal irukirom annan kudi pothaikku adimaiyanavar nan kastappattu irukkiran nan biranthathu muthal anupavitha pirachinaigal malai pol kuvinthu kidakkuthu en appa oru kudikarrar en ammavai adipar en amma theekkulithu tharkolai pannikondanga appothu enakku 2 vayathu athumuthal Volvo pirachinai ooril en paatitha valarthargal ippothu nalla valai kidaikka vendum iyya

  2. piranthathu muthal 26 vayathuvaraikkum nan badatha kastam illanga nan oru handihaft appa amma illai iya en thanhai veetil nan en annanum anni 2 kulanthaigal irukirom annan kudi pothaikku adimaiyanavar nan kastappattu irukkiran nan biranthathu muthal anupavitha pirachinaigal malai pol kuvinthu kidakkuthu en appa oru kudikarrar en ammavai adipar en amma theekkulithu tharkolai pannikondanga appothu enakku 2 vayathu athumuthal Volvo pirachinai ooril en paatitha valarthargal ippothu nalla valai kidaikka vendum iyya

Leave a Reply

Your email address will not be published.


*