தனுசு: 2016 டிசம்பர் மாத பலன்கள்

தனுசு:

மாத ஆரம்பத்திலேயே வளர்பிறை சந்திரனும், சுக்கிரனும், புதனும் ராசியில் ஒன்று கூடும் நல்லமாதம் இது. ஏழரைச்சனி தொடங்கிருந்தாலும் அதைத் தடுக்கும் விதமாக கடந்த சிலமாதங்களாக கேது மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களுக்கு தைரியத்தையும், தெம்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மாத பிற்பகுதியில் கேதுவுடன் யோகாதிபதி செவ்வாய் இணைவது தனுசிற்கு மன வலிமையையும், பொருளாதார உயர்வுகளையும் தரும் அமைப்பு என்பதால் சிக்கல்கள் எதுவும் டிசம்பர் மாதம் இல்லை.

தனுசுக்கு அனைத்து சிறப்புக்களும் சேரும் மாதம் இது. யோகம் தரக்கூடிய கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். இனிமேல் உங்களுக்கு தோல்வி இல்லை. இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்ட நீங்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள்.

தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செவ்வாய் ராசியில் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம்.

2,5,6,7,11,12,13,24,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி காலை 9 மணி முதல் 18-ம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் விரிவாக்கம், புதிய கடை ஆரம்பித்தல் போன்றவற்றை இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

2 Comments on தனுசு: 2016 டிசம்பர் மாத பலன்கள்

  • வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*