சிம்மம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

சிம்மம்:

ராசிநாதன் நீசநிலையில் இருந்து விலகி தற்போது சனியுடன் இணைந்திருந்தாலும், யோகாதிபதியான செவ்வாய் மாத பிற்பகுதியில் ஆறாமிடத்தில் இருந்து மாறி ராசியை பார்க்க போவதால், கடந்த சில வாரங்களாக உடலிலும், மனதிலும் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்கள் சிங்கத்தை போல சிலிர்த்து எழப்போகும் மாதம் இது. சனியை ராசிநாதன் சூரியன் மிக நெருங்கி அஸ்தமனம் செய்வதால் இதுவரை ராசிக்கு இருந்த சனி பார்வையால் அதிக அவதிக்குள்ளான சிம்மத்தினர் இனிமேல் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட தொடங்குவீர்கள்.

வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள்.

1,3,5,7,13,14,15,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 10-ம் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உடல்நலத்தில் அக்கறை வைக்கவும். மனதை பாதிக்கும் செயல்கள் நடக்கும் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதையும் பொறுமையுடன் கையாள்வது நல்லது.

5 Comments on சிம்மம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

  1. Born 4/02/1953 Laguna Libra rasi virgoyan the 1stlagna Saturn 4th ragu sun mercury

    6th Venus Mars 7thJupitar 10 thkethu 12 thmoon now puthan maka tissai no much progress one astrologer said going to earn unbelievable wealth please guruji say about it born in Malaysia 11.45pm Wednesday .

Leave a Reply

Your email address will not be published.


*