கன்னி: 2016 டிசம்பர் மாத பலன்கள்

கன்னி:

மாத ஆரம்பத்தில் ஒன்பது, பத்து, பதினொன்றுக்குடைய சுக்கிரன், புதன், சந்திரன் மூவரும் கூடி, தொழில் ஸ்தானத்தை பார்ப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை தருகின்ற கிரக நிலைகள் என்பதால் டிசம்பர் மாதம் கன்னிக்கு தொழில் விஷயங்களில் நல்லவைகளை தரும் மாதமாக இருக்கும். எட்டுக்குடைய செவ்வாய் மாத பிற்பகுதியில் ஐந்தாமிடத்தில் இருந்து மாறி, ஆறில் உள்ள கேதுவுடன் இணைவதும் உங்களில் கடன் தொல்லைகளையும், வருமானக் குறைவையும், தொழில் சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதை நிவர்த்திக்கும் அமைப்பு என்பதால் டிசம்பர் மாதம் கன்னிக்கு நல்ல மாதமே.

மாத ஆரம்பத்தில் தாய்வழி உறவில் முட்டல்களும் மோதல்களும் இருக்கும். தாயுடன் பிறந்தவர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு உங்களை மனக்கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

5,6,7,8,14,15,16,21,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி காலை 8 மணி முதல் 12-ம் தேதி காலை 9 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் புதியவர் எவர் அறிமுகமானாலும் அவரால் பின்னாளில் பிரச்சினைகள் வரலாம்.

7 Comments on கன்னி: 2016 டிசம்பர் மாத பலன்கள்

  • வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 1. My lignum is kataka rasi is simha nakchathira pooram in the 6th house guru,surya,raagu is there its ok or do I need any Program for this

Leave a Reply

Your email address will not be published.


*