கடகம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

கடகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் உச்சசெவ்வாயுடன் அமர்ந்து ராசியை பார்ப்பதும், இவர்கள் இருவரையும் மூன்றாமிடத்தில் அமர்ந்திருக்கும் குருபகவான் பார்ப்பதும் கடகராசியின் கஷ்டங்களை தீர்க்கும் கிரக நிலைகள் என்பதால் டிசம்பர் மாதம் கலக்கங்கள் எதுவும் இல்லாத மாதமாக அமையும். அதேநேரத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் ராகு அமர்ந்து, குடும்பாதிபதி சூரியன் சனியுடன் இணைவதால் ஒரு கருப்பு நிறமுள்ள வேற்றுமதக்காரர் அல்லது காலை விந்தி விந்தி நடப்பவரால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும்.

அலுவலகங்களில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த பிரச்னையை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்

2,4,5,14,15,16,19,20,21,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி இரவு 11 மணி முதல் 8-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்கவும். உங்களின் மனம் இப்போது ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் மேற்கண்ட நாட்களில் எடுக்காமல் இருப்பது நல்லது.

1 Comment on கடகம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

Leave a Reply

Your email address will not be published.


*