Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 34 (21.4.2015)

ஆர்.வரதராஜன், வேங்கைவாசல்.

கேள்வி:
ரா சூ
ராசி  பு
சுக்
சந்
 குரு கே செவ்
சனி

பல இடங்களிலிருந்து என் மகனுக்கு ஜாதகங்கள் வந்தாலும் பெண் வீட்டார் சரியாகப் பதில் சொல்வதில்லை. எப்போது திருமணம் நடக்கும்? ஏதாவது தோஷம் இருந்தால் நிவர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம்.

பதில்:

துலாம் லக்னம், மகர ராசி. லக்னத்தில் சனி, செவ். மூன்றில் குரு. எட்டில் ராகு. ஒன்பதில் சூரி. பத்தில் புத, சுக்.

லக்னத்தில் செவ்வாய், சனி இணைந்திருப்பதும் எட்டில் ராகு இருப்பதும் தோஷம் என்பதால் பெண் வீட்டார் தயங்குகிறார்கள். இதுபோன்ற அமைப்பிற்கு ஜாதகப்படி 33 வயதில்தான் திருமணம் ஆகும். ராகு தோஷ நிவர்த்திக்காக ஶ்ரீகாளகஸ்தியில் ருத்ராபிஷேகம் செய்யுங்கள்.

க. வெங்கடாசலம், சேலம் – 14.

கேள்வி:
ராசி  ரா

கே
சந் செவ்  சூ
பு
குரு
சனி
சுக்

குருஜி அவர்களுக்கு வணக்கம். ஒரு தினசரி நாளிதழ் சேலம் கிளையில் பணிபுரிகிறேன். செவ்வாய்க்கிழமை மாலை மலரை தவறாமல் படிக்கிறேன். ஜோதிட பதில்களைச் சொல்லி அசத்தி வருகிறீர்கள். இது வெறும் புகழ்ச்சி இல்லை. எனது திருமணம் தாமதமாவதன் காரணம் என்ன? எப்பொழுது நடக்கும்?

பதில்:

மகர லக்னம், தனுசு ராசி, ஏழில் ராகு, ஒன்பதில் சுக், குரு, சனி, பத்தில் சூரி, புதன், பதினொன்றில் செவ்.

லக்னத்திற்கு ஏழிலும் ராசிக்கு எட்டிலுமாய் ராகு இருப்பது குற்றம். அதை விட தாம்பத்யசுகத்தைத் தரும் சுக்கிரன் நீசமாகி குருவுடன் இணைந்ததும் தோஷம். சுக்கிர, குரு இணைவால் தாம்பத்யசுகமும், அதன் மூலம் கிடைக்கும் புத்திர சுகமும் தாமதமாகும். நடக்கும் செவ்வாய்தசை சனிபுக்தியில் வரும் கார்த்திகை அல்லது தைமாதத்தில் சுக்கிரனுடன் இணைந்த குடும்பாதிபதி சனி திருமணத்தைத் தருவார்.

இரண்டாம் தாரக் குழந்தைகள் முன்னேற முடியாதா ?

டி. செல்வராஜ், கொருக்குப்பேட்டை.

கேள்வி:
சந் சூ  பு
சுக்
ராசி  ரா
கே  செவ்
குரு
சனி

நான் என் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன், முதல் தாரத்துப் பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள். இரண்டாம் தாரத்திற்கு பிறந்த நாங்கள் வறுமையில் இருக்கிறோம் எந்தத் தொழில் செய்தாலும் முன்னேற்றம் இல்லை. எங்கள் தந்தைக்குச் சொத்து எதுவும் இல்லை. எல்லாம் அவரவர் முயற்சிதான். இரண்டாம் தாரப்பிள்ளைகள் துன்பம்தான் படுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?இத்தனைக்கும் எங்களை விட முதல் தாரக் குழந்தைகளைத்தான் எங்கள் தாய் நன்றாக வளர்த்தார். இருந்தும் எங்கள் துன்பத்திற்கு காரணம்   என்ன? குருஜி அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

பதில்:

கடக லக்னம், மேஷ ராசி லக்னத்தில் ராகு, இரண்டில் செவ், குரு, சனி, பதினொன்றில் சூரி, பனிரெண்டில் புதன், சுக்.

இரண்டாம்தாரத்துக் குழந்தைகள் எத்தனையோ பேர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான நிலையில் இருக்கிறார்கள். ஒரு மனிதனுடைய அதிர்ஷ்டம் அவன் எப்படி, யாருக்குப் பிறந்தான் என்பதில் இல்லை. எந்த நேரத்தில் பிறந்தான் என்பதில்தான் இருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலமிழந்து ஆறு, எட்டிற்குடையவர்கள் வலுப்பெறக்கூடாது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் பத்தாம் வீட்டில் திக்பலம் இழந்திருக்கிறார். லக்னத்தில் ராகு அமர்ந்து லக்னமும் பலவீனமானது. அதே நேரத்தில் ஆறுக்குடையவர் ஆறாம் வீட்டையும், எட்டுக்குடையவர் எட்டாம் வீட்டையும் பார்த்து வலுப்படுத்துவதால் நீங்களே உங்களுடைய செயல்களின் காரணமாக எதிரிகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

தற்போது ராகு தசை ஆரம்பித்துள்ளதும் இதை உறுதி செய்கிறது. சூரிய சந்திரர்களின் லக்னங்களான கடக, சிம்மத்திற்கு ராகு பகவான் யோகம் செய்ய மாட்டார். ஒரு நெருக்கடியான அமைப்பில் இருந்தால் மட்டுமே நல்லது செய்வார். சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் ராகுவிற்கான பிரீத்திகளையும் செய்யுங்கள். அஷ்டமச் சனி ஆரம்பித்துள்ளதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். காசில் கவனமாக இருங்கள்.

இராம. நந்தகுமார், கோயம்புத்தூர்.

கேள்வி:
 கே ராசி
குரு
செவ்
ரா
சூ
சுக்
சந்
பு
சனி

தொழிலில் முன்னேற்றம் இல்லை. தொழில் செய்ய வேண்டாம் என்று மனைவி சொல்லுகிறாள். தொடர்ந்து செய்யலாமா? வேலைக்கு போகலாமா? எதிர்காலம் பற்றி தெரியப்படுத்துங்கள்…

பதில்:

மகர லக்னம், விருச்சிக ராசி. எட்டில் செவ், குரு, ராகு. ஒன்பதில் சனி. பதினொன்றில் புத. பனிரெண்டில் சூரி, சுக்.

பெண்களுக்கு எப்பொழுதுமே ஒரு உள்ளுணர்வு உண்டு. அவர்கள் சொல்வது பெரும்பாலான நேரத்தில் சரியாகவே இருக்கும். பத்திற்குடைய தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உங்களுக்கு பனிரெண்டில் மறைந்திருக்கிறார்.. தற்போது ஏழரைச் சனியும் நடக்கிறது. மனைவியின் சொல்படி வேலைக்கு போங்கள். சனி முடிந்ததும் மீண்டும் சொந்தத் தொழில் செய்வது பற்றி யோசிக்கலாம். அடுத்து சுக்கிர தசை ஆரம்பிக்க உள்ளதால் எதிர்காலம் பிரமாதமாகவே இருக்கும்.

அ. சேஷாசலம், சென்னை – 17.

கேள்வி:
செவ் சந்  ல
கே
சனி
ராசி
குரு  சூ
பு
 ரா சுக்

மாலை மலரில் தங்களின் ஜோதிட விளக்கங்களினால் ஈர்க்கப்பட்டு எழுபது வயதான நான் என்னை விட மிகவும் வயதில் குறைந்த தங்களை குருவாக ஏற்று தங்களின் பாதம் வணங்கி பதில் கேட்கிறேன். குருநாதரே… தாங்கள் ஒருவர்தான் ஜோதிடரீதியாக இதற்குப் பதில் தர முடியும். மகளுக்கு இரண்டாவது திருமணயோகம் உள்ளதா? அவள்கணவரது பெயரில் உள்ள வீடும் , நகையும் திரும்பக் கிடைக்குமா? பேரன் என் மகளையும் மனவளர்ச்சி குறைந்த அவன் தங்கையையும் காப்பாற்றுவானா ? பேத்தி குணமடைவாளா? அவளது ஆயுள் எப்படி?

பதில்:

மகளுக்கு மிதுனலக்னமாகி இரண்டாம் திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றுக்குடைய செவ்வாய் அங்கே ஆட்சி பெற்றாலும் ஏழுக்குடைய குருபகவான் நீச வக்ரம் பெற்று உச்சநிலை அடைந்து சுக்கிரன் நீசம் பெற்று ஏழில் ராகு அமர்ந்து அவரை லக்னச்சனி பார்த்ததால் இரண்டாம் திருமணம் இல்லை.

கணவரது பெயரில் உள்ள வீடும், நகைகளும் மகன் மூலமாகக் கிடைக்கும். பேரனின் ஜாதகத்தில் நான்கிற்குடைய சுக்கிரன் கேந்திரம் பெற்று நான்காமிடம் வலுவானதால் தாயைக் கடைசிவரை காப்பாற்றுவான்.

பேத்தி ஜாதகத்தில் கடக லக்னமாகி லக்னத்தில் நீசசெவ்வாய் அமர்ந்து லக்னத்தை சனி பார்த்ததால் குணமடைவது பரம்பொருளின் கையில் இருக்கிறது. எட்டாமிடத்தை நீசசெவ்வாய் ரிஷபச்சனி சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய ஐந்துபேரும் பார்த்து தற்போது பாதகாதிபதியான சுக்கிரன் இரண்டாமிடமான மாரகஸ்தானத்தில் இருந்து தசை நடத்துவதால் ஆயுள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

சரசு, அரியாங்குப்பம்.

கேள்வி:
சந்  ரா

சூ
ராசி
பு
சுக்
 கே  குரு செவ்
சனி

மூத்த மகள் டிகிரி முடித்து இந்தி, பிரஞ்சு, டைலரிங் எல்லாமும் முடித்து 33 வயதாகிறது. திருமணமாகவில்லை. நிறைய வரன்கள் வந்தாலும் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடுத்து இன்னொரு மகளும் இருக்கிறாள். மூத்தவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

பதில்:

கேள்வி கேட்கும் எல்லோருக்குமே பரம்பொருளின் ஆசியினால் தெளிவாக, துல்லியமாக பதில் தர ஆசைதான். ஆனால் பிறந்ததேதி, நேரம், இடத்தைக் குறிப்பிடாமல் வெறும் ஜாதகராசிக் கட்டப் பக்கத்தை மட்டும் அனுப்பினால் நான் எப்படியம்மா பதில் தருவது?

ராசிக்கட்டத்தின்படி கும்பலக்னத்திற்கு எட்டில் இணைந்துள்ள செவ்வாய், சனி உங்கள் மகளுக்கு தாமத திருமணம்தான் நல்லது என்பதைக் காட்டுகிறது. களத்திரகாரகன் சுக்கிரன் பனிரெண்டில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது. மகளின் ரிஷபராசிக்கு இன்னும் ஒரு வருடம் கழித்தே குருபலமும் வருகிறது.

பி. சுந்தரவடிவேல், கோவை.

கேள்வி:

பல கடிதம் எழுதியும் தாங்கள் பதில் அளிக்கவில்லை. எனக்கு எப்பொழுது திருமணம் ஆகும்?

பதில்:

இன்னும் எத்தனை கடிதம் எழுதினாலும் பிறந்தநேரம், பிறந்த இடம் இல்லாமல் வெறும் பிறந்தநாளை மட்டும் வைத்துக் கொண்டு என்னால் பதில் தரமுடியாது.

ஆர். மணி , முத்தியால்பேட்டை.

கேள்வி:
 குரு
ராசி  கே
சுக்
ரா
சூ
பு
சனி
சந்
செவ்

மகன் ஐ.டி. , பிடெக் படித்து முடித்து இரண்டு வருடம் ஆகிறது. வேலை கிடைக்கவில்லை. ஒரு இடத்தில் பணம் கொடுத்து ஏமாந்து விட்டோம். அந்தத் துறையிலேயே வேலை தேடுகிறான். எப்போது வேலை? எப்போது திருமணம்?

பதில்:

மகனுக்கு விருச்சிக ராசியாகி ஏழரைச் சனி நடக்கும் நேரத்தில் வேலைக்காக பணம் கொடுத்தது தவறு. முப்பது வயத்திற்குபட்ட அனைத்து விருச்சிக ராசிக்காரர்களையும் சனி வேதனைபடுத்திக் கொண்டுதான் இருக்கிறார். நவம்பர் மாதம் 2-ந்தேதிக்குப் பிறகு உங்கள் மகன் வேலை இல்லாமல் இருக்க மாட்டார். சுக்கிர தசையில் ராகுபுக்தி நடப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை செய்வார். வெளிநாடு செல்வார். லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், எட்டில் சனி என்ற அமைப்பு இருப்பதால் தாமத திருமணம்தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code