Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 67 (22.12.2015)

சி. வைத்தி, செட்டிமாங்குறிச்சி.

சந்,பு
சுக்

ரா
 சூ
குரு
ராசி
செவ்
சனி

கேள்வி :

 

30 வயதாகியும் நிரந்தர வேலை இல்லை. திருமணமும் ஆகவில்லைஅரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன். கிடைக்க வாய்ப்புள்ளதாசர்ப்பதோஷம் இருப்பதாக சொல்கிறார்கள் உண்மையா? ஏன் என்வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை?

பதில்:

(மேஷலக்னம், மீனராசி, லக்னத்தில் ராகு, எட்டில் செவ், சனி. பதினொன்றில் சூரி, குரு. பனிரெண்டில் சுக், புதன்.)

இரண்டு பெரும் பாபக்கிரகங்களான செவ்வாயும், சனியும் எட்டில் இணைந்து குடும்பவீடான இரண்டாமிடத்தைப் பார்த்ததாலும் ராசிக்கு இரண்டில் ராகு அமர்ந்ததாலும் 33-வது வயதிற்கு மேல்தான் உங்களுக்கு திருமணமாகும். அதுவே நல்லது.

லக்னாதிபதி எட்டில் மறைந்து சனியுடன் இணைந்து லக்னத்திற்கு சுபர் பார்வையின்றி ஏழுக்குடைய சுக்கிரன் நீசனுடன் இணைந்த உங்கள் ஜாதகத்தில் ராசிக்கு ஏழுக்குடையவன் நீசமானதும் களத்திரதோஷம் சிம்ம வீட்டை சூரியன் பார்த்து வலுப்படுத்தியதால் அரசு வேலை உண்டு. ஆனால் மேஷ லக்னத்திற்கு பாவியான புதன் நீசபங்க யோகத்துடன் ஆறாமிடத்தைப் பார்த்து தசை நடத்துவதால் தடைபடுகிறது. 2018-ம் ஆண்டுதான் தடை விலகும்.

லக்னத்திலும் ஏழாமிடத்திலும் ராகு-கேதுக்கள் இருப்பது சர்ப்பதோஷம்தான். தற்போது ராகுபுக்தியும் நடப்பதால் உரிய பரிகாரங்களை செய்யவும். பாவி தசையான புதன்தசை நடப்பதால் முன்னேற்றம் இல்லை. கேதுதசை முதல் முன்னேற்றம் உண்டு.

வி. ஆர். நடராஜன், திருமுல்லைவாயில்.

கேள்வி :

ரா
சந் ராசி
 சனி
 செவ்
குரு
சூ
பு
சுக்
கே

செல்வாக்காக இருந்து செல்லாக்காசாகி விட்டேன். 67 வயதிலும் உழைத்தால்தான் உணவு என்ற நிலை. ஓய்வுபெற்ற பணத்தை கடன்கொடுத்து ஏமாந்து விட்டேன். மனைவி, மகன், தாய், அண்ணன் யாரும் உயிருடன் இல்லை. சொந்தங்களின் உதவி இல்லை. தனிமையில் தவிக்கிறேன். காது வேறு மந்தமாக இருக்கிறது. இனியாவது பணம் தங்குமா? ஆயுள் எவ்வளவு? தமிழ்நாட்டின் பெரும்பாலான கோவிலுக்கு சென்று வந்தும் என் நிலை சரியில்லை. எப்போது சரியாகும்?

பதில்:

(திருக்கணிதப்படி ரிஷபலக்னம், கும்பராசி. நான்கில் சனி. ஆறில் சுக், கேது. ஏழில் சூரி, புதன். எட்டில் செவ், குரு. பனிரெண்டில் ராகு.)

சந்திரன் பத்தில் அமர்ந்து அவனுக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்ததால் அரசு, வேலை கிடைத்தது. ஆனால் சிம்மத்தில் சனி அமர்ந்து பத்தாம் வீட்டை பார்த்ததால் வேலையில் கிடைத்த பணம் கையில் நிலைக்கவில்லை. இரண்டாம் வீட்டை எட்டுக்குடைய குருபகவான் ஆட்சி பெற்று பார்த்ததால் குடும்பமும், தனமும் இல்லை.

தற்போது ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேதுவின் தசை லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதால் 2017 பிப்ரவரிமாதம் முதல் நிம்மதியைத் தரும். லக்னாதிபதி ஆட்சிபெற்று அஷ்டமாதிபதியும் ஆட்சி பெற்றதால் தீர்க்காயுளுடன் இன்னும் சில காலம் உயிருடன் இருப்பீர்கள். கும்பராசி என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்தீர்கள். இனிமேல் சிரமங்கள் இருக்காது. கோவில்களுக்குப் போய் வந்தது என்றுமே வீணாகாது.

செவ்வாய்க்கான பரிகாரங்கள்

ஜே. பி. ரவிக்குமார், நாமக்கல்.

கேள்வி :

 சனி ரா
ராசி
செவ்  குரு
 சந் ல,சூ
பு
சுக்

48 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. வயதுதான் கூடிக்கொண்டேபோகிறது. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பதில் சொல்ல முடியவில்லை. மிகுந்த மனஉளைச்சலில் அவதிப்படுகிறேன். சகோதரஉதவியும் இல்லை. தொழில்வேறு முடங்கி உள்ளது. திருமணம் எப்போதுஎதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? தொழில் மற்றும் திருமணத்திற்குப் பரிகாரம் சொல்லி இந்த இளையவனின் எதிர்காலத்தைப் பற்றி நல்லவாக்கு தரும்படி குருஜி அவர்களின் பொற்பாதங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

விருச்சிகலக்னம், தனுசுராசி. லக்னத்தில் சூரி, புதன். மூன்றில் செவ். ஐந்தில் சனி. ஆறில் ராகு. பத்தில் குரு. பனிரெண்டில் சுக்)

பாபக்கிரகங்கள் லக்னாதிபதியே ஆனாலும் உச்சமாகக் கூடாது எனும் எனது பாபக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிக்கு உங்களுடைய ஜாதகமும் நல்ல உதாரணம். செவ்வாய், ஒன்று ஆறுக்குடையவனாகி உச்சம் பெற்று ஆறாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தி இரண்டு பெரும்சுபர்களான குருவும், சுக்கிரனும் ஆறைப் பார்த்து வலுப்படுத்தி இதுவரை ஆறாமிடத்துப் பலனே நடந்து கொண்டிருக்கும் ஜாதகம்.

ஏழுக்குடைய சுக்கிரன் பனிரெண்டில் அமர்ந்து ராகு-கேதுக்களுடன் இணைந்து ஏழாமிடத்தை அஷ்டமாதிபதி புதனும், சனியும் பார்த்து களத்திரதோஷமும் லக்னத்திற்கு ஐந்தில் சனி அமர்ந்து, ராசிக்கு ஐந்தில் ராகு அமர்ந்து புத்திர தோஷமும் உண்டானதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. முறையான பரிகாரங்களைச் செய்திருந்தால் கடந்த மூன்று   வருடங்களாக நடைபெற்ற ராகு தசை சுக்கிரபுக்தியில் நிச்சயம் திருமணமாகி இருக்கும். ஆனால் கர்மவினைகளின் காரணமாக பரம்பொருள் அதற்கு அனுமதி தரவில்லை. செவ்வாயை சூட்சுமவலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யும் பட்சத்தில் உடனடியாகத் திருமணம் நடைபெறும்.

ராகுதசை நடப்பதால் ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே ஶ்ரீகாளகஸ்திக்கு சென்று இரவுதங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளுங்கள். இன்னொரு ஜென்மநட்சத்திரமன்று வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டு ஒரு ஜாமம் எனப்படும் இரண்டரை மணிநேரம் அந்த திருகோவிலின் உள்ளே இருக்கவும். ஒரு செவ்வாய்க்கிழமையன்று சென்னை பூந்தமல்லியில் இருக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் வழிபட்டு ஒரு முகூர்த்தம் எனப்படும் 48 நிமிடம் கோவிலின் உள்ளே இருக்கவும்.

ஒரு செவ்வாய்க்கிழமை பகல் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் செவ்வாய் ஹோரையில் ஒரு சுமங்கலிப் பெண்ணிற்கு ஒரு சிகப்புநிற பிளாஸ்டிக் தட்டில் ஒரு சிகப்புப்புடவை, சிகப்பு ரவிக்கை, குங்குமம், சிகப்புநிற ரோஜாப்பூக்களுடன், ஒரு சிகப்புத்துணியில் ஒரு கிலோவிற்கு குறையாத துவரம்பருப்பை முடிச்சிட்டு வைத்து தானம் செய்யவும். பரிகாரங்களை செய்தவுடன் திருமணம், தொழில் இரண்டும் கைகூடும்.

டி. டாங்கே செட்டியார், புதுச்சேரி.

கேள்வி :

பத்து ஆண்டுகளாக தொழில் மிகமிகச் சிரமத்தில் இருக்கிறது. எப்போது நல்ல மாற்றம் ஏற்படும்? தொழில் எப்போது சிறப்படையும்? எம். பி. .படித்துள்ள மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் நடக்கும் என்பதற்கான பதிலை தங்களின் அபிமான வாசகர் என்ற முறையில் எதிர்பார்க்கிறேன்.

பதில்:

சரியாகச் சொல்லப் போனால் கடந்த ஒன்பது வருடங்களாக பிரச்சனைகள் ஒன்று மாற்றி ஒன்று என்று வந்து உங்களை மிகுந்த சிரமத்தில் வைத்திருக்கும். திருக்கணிதப்படி மிதுனலக்னமாகி, ஐந்தாமிடத்தில் ஆறுக்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்த ராகுவின் தசை கடந்த பதினொட்டு வருடங்களாக உங்களுக்கு நடந்து சென்றமாதம் நவம்பர் 21 அன்று முடிந்தது.

மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ஆறு, பதினொன்றுக்கு உடையவர் என்பதாலும் அவர் பதினொன்றாம் வீட்டில் இருந்து ராகுவைப் பார்ப்பதாலும் ஆரம்பத்தில் ராகு தசையின் முதற்பகுதி ஒன்பதுவருடங்கள் உங்களுக்கு லாபநிலையைக கொடுத்து பிற்பகுதியான 2006 முதல் சென்ற மாதம் வரை ஆறாமிடத்து பலன்களை தந்து உங்களை மீளாத துன்பத்தில் ஆழ்த்தி இருப்பார். இந்த சமயங்களில் உங்கள் குடுபத்தில் யாருக்காவது ஏழரைச்சனி அமைப்புகள் இருந்து இருக்கலாம்.

கடந்த ஒரு மாதகாலமாக பத்தாமிடத்தைப் பார்க்கும் ஜீவனாதிபதியான குருவின் தசை ஆரம்பமாகி உள்ளது. குருபகவான் வர்க்கோத்தமம் பெற்றிருப்பதால் சுயபுக்தி முடிந்த பிறகு இன்னும் இரண்டு வருடங்களில் தொழில் மறுபடியும் மேன்மையான நிலைக்கு வந்து உங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வருவீர்கள் என்பது உறுதி.

மகனுக்கு ரிஷபலக்னம், ரிஷபராசியாகி. லக்னத்தில் செவ்வாயும், ஏழில் சனியும் அமர்ந்த ஜாதகம் என்பதால் திருமணம் தாமதமாகிறது.

அதேநேரத்தில் லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றதால் அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு புதன்புக்தியில் திருமணமும், திருமணத்திற்கு பின் நிரந்தமான வேலையும் கிடைக்கும். மகனின் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் வலுவாகி சூரியன் உச்சம் பெற்றதால் அவனின் தந்தையாகிய நீங்கள் இனிமேல் செல்வாக்கான நிலையை அடைந்தே தீர வேண்டும்.

எஸ். ஜெயச்சந்திரன், ராசிபுரம் 

கேள்வி :

திருமணம் எப்போது? அரசுவேலை உண்டா? உடல்நிலை சிறு சிறு உபாதைகள் தோன்றுகின்றன. என்ன செய்தால் சரியாகும் என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன். 

பதில்

மகரலக்னம் மகரராசியாகி சூரியன் உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் நடைபெறும் குருதசை சூரியபுக்தியில் 2016 மே மாதத்திற்கு மேல் அரசுவேலை கிடைக்கும். ஆனால் சிம்மத்தில் சனி செவ்வாய் ராகு என மூன்று பாபக்கிரகங்கள் அமர்ந்ததால் அரசுவேலைக்குக் கடுமையான தடை இருக்கும்.

அடுத்த ஏழுக்குடைய சந்திரபுக்தியில் சந்திரன் ஏழைப் பார்ப்பதால் 2017 ம் ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும். லக்னாதிபதி சனி எட்டில் பகைபெற்று அமர்ந்து அடுத்து அவரே தசையும் நடத்தப் போவதால் சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கத்தான் செய்யும். லக்னாதிபதி சனிக்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

எஸ். மணிகண்டன் புரசைவாக்கம்.

கேள்வி :

ரா
ராசி
சந்
குரு
சனி சூ
பு
ல,செ
சுக்

 


தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோவில்களுக்கெல்லாம் சென்று பரிகாரம் செய்தும் நிரந்தர வேலையும் திருமணமும் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அரசு வேலைக்கு வாய்ப்புள்ளதா? எப்போது திருமணம்? ராகுதசையில் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது. பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்கள் அய்யா…

பதில்

(கன்னிலக்னம் மகரராசி லக்னத்தில் சுக் செவ், இரண்டில் சூரி புத, மூன்றில் சனி, ஐந்தில் குரு, எட்டில் ராகு)

கன்யா லக்னத்திற்கு நீசச்சுக்கிரனின் சாரம் வாங்கி எட்டில் மறைந்த ராகு செவ்வாயாகவே மாறி நல்ல பலன்களைத் தரமாட்டார். ராகு நன்மை தர வேண்டுமெனில் சுபர் வீடுகளில் சுபரோடு இருக்க வேண்டும். ஆயினும் அரசுவேலைக்குக் காரணமான சூரியன் சந்திரனுக்கு பத்தில் அமர்ந்து சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அடுத்த மார்ச் மாதத்திற்கு மேல் ஆரம்பிக்க உள்ள ராகுதசை சுக்கிரபுக்தியில் திருமணம் அரசு வேலை இரண்டுமே கிடைக்கும்.

இத்தனை கோவில்களுக்குச் சென்றும் பரிகாரம் செய்த நீங்கள் உங்கள் லக்னாதிபதியான புதனின் திருவெண்காட்டுக்குப் போகவில்லையே… உடனடியாகச் சென்று புதனுக்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code